என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தின் முன்னோட்டம்.
    சந்தானம் கதாதாயகனாக நடிக்க அவருடன் முதன் முதலில் யோகிபாபு இணைய, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் படம் 'டகால்டி'.

    சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனே, ஜெய்ப்பூர் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

    சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

    விஜயநாராயணன் இசையையும், கார்கி பாடல்களையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

    ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
    வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இயக்கத்தில் செந்தில்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் "டம்மி ஜோக்கர்" படத்தின் முன்னோட்டம்.
    ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் "டம்மி ஜோக்கர்". இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள். மேலும் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
     
    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: " 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள். மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப்பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.

    டம்மி ஜோக்கர் படக்குழு

    அவனுக்கு அப்பா, நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக்கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர். வன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். 

    முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்" என்றார்கள்.
    ஆண்ட்ரியா நடிப்பில் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘கா’ படத்தின் முன்னோட்டம்.
    பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - அறிவழகன், இசை - அம்ரிஷ், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நாஞ்சில். இப்படம் குறித்து நாஞ்சில் கூறும்போது, ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

    30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார். 
    அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கத்தில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் முன்னோட்டம்.
    ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மழையில் நனைகிறேன்”. மேலும் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். 

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான  கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. 

    மழையில் நனைகிறேன் படக்குழு

    ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
    வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீயான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
    கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    கரிகாலன், ரிஷா ஹரிதாஸ்

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம்  இருக்கும். இப்படத்தில்  உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார். 
    எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் முன்னோட்டம்.
    எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குனர் எம்.ஆர். பாரதி கூறுகையில், ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படம் ஒரு வங்காளப் படத்தின் ரீமேக்காகும்.

    அழியாத கோலங்கள் 2 படக்குழு

    சாகித்ய அகடாமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் காதலியை பார்க்கச் செல்கிறார். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்தப் படம் வங்காளத்தில் பல விருதுகள் வாங்கி சாதனை படைத்தன. இந்தப் படத்தில் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். 
    அறிமுக இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாக்கப்’ படத்தின் முன்னோட்டம்.
    ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் "லாக்கப்". இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    வெங்கட் பிரபு

    பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் முன்னோட்டம்.
    வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.

    தம்பி

    மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துண்ணனர். இந்த படத்தில் கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
    குட்டி ராதிகா நடிப்பில் நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘தமயந்தி’ படத்தின் முன்னோட்டம்.
    இயற்கை, மீசை மாதவன் உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னட பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில் "தமயந்தி" என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும், கணேஷ் நாராயண் இசையையும், வினோத்குமார் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

    தமயந்தி படத்தில் குட்டி ராதிகா

    முன்னனி இயக்குனர்கள் பலரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தை பற்றி இயக்குனர் நவரசன், " 1980 ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை  இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு அரண்மனையிலிருந்து எதிர்பாராத விதமாக கதாநாயகியின் ஆவி வெளியே வருகிறது. தன்னையும் குடும்பத்தையும் அழித்தவர்களை தேடி வருகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் விறுவிறுப்பு உருவாக்கியுள்ளோம்’ என்றார்.
    செந்தில், நிம்மி நடிப்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் மேகி படத்தின் முன்னோட்டம்.
    சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ்  தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மேகி’.  ரியா, நிம்மி, ஹரிணி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்து உள்ளனர். மேலும் செந்தில், அஜித் பிரகாஷ், திடியன், கலா பிரதீப், மண்ணை சாதிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திகேயன், "மேகி ஒரு காமெடி ஹாரர் படம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் மேகி உருவாகியுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா கதைப்படி நண்பர்கள் ஐந்து பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது அவர்களது வாகனம் பழுதாகிவிடுகிறது. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் ஒரு பெண் இருக்கிறார். 

    மேகி படத்தின் நாயகன்

    அவரிடம் சென்று உதவி கேட்கிறார்கள். ஆனால் அந்த பங்களாவில் இருக்கும் பெண் தான் 'மேகி' பேய். அந்த பேயிடம் ஐந்து பேரும் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் திருடன் ஒருவனும் சேர்ந்து மாட்டிக்கொள்கிறான். அவர்கள் அனைவரும் அந்த பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரில்லிங்காக சொல்லிருக்கிறேன்.
    ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா - மாளவிகா நடிக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் முன்னோட்டம்.
    ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா - மாளவிகா இணைந்து நடிக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்திருக்கிறது.

    இப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், "எங்களது கனவுப் படமான 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.

    அவினாஷ் ஹரிஹரன் எழுதி இயக்கியிருக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்துக்கு மேட்லி புளூஸ் இசையமைக்க, சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீண் ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, எட்வர்ட் கலைமணி கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பாக காவ்யா வேணுகோபால் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
    ராகுல் பரமகம்சா இயக்கத்தில் ஆரியன், உபாசனா நடிப்பில் உருவாகி வரும் கருத்துக்களை பதிவு செய் படத்தின் முன்னோட்டம்.
    சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜித்தன் 2 என்ற திகில் படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இப்படத்தை இயக்குகிறார்.

    கருத்துக்களை பதிவு செய் படக்குழு

    இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய். அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
    ×