என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    டி.எஸ். திவாகர் இயக்கத்தில் யோகேந்திரா, அக்ஷதா நடிப்பில் உருவாகி இருக்கும் ”லோகா” படத்தின் முன்னோட்டம்.
    ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிப்பில் டி.எஸ். திவாகர் இயக்கி இருக்கும் படம் "லோகா". யோகேந்திரா, அக்ஷதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

    35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவன் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர். 

    லோகா படக்குழு

    கொலை செய்தவனை கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்த கொலைகளில் புதுமண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்?எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல்துறைக்கு பல அமானுஷ்யமான திகில்லான நிகழ்வுககளை பார்க்கின்றனர்? அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது. அதன் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. அது என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கிளைமாக்ஸில் பதில் கிடைக்கும் என்கிறார் இயக்குனர்.
    பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிப்பில் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் பஞ்சராக்ஷ்ரம் படத்தின் முன்னோட்டம்.
    பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் பஞ்சராக்ஷ்ரம் படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', 'சந்திரமௌலி' மற்றும் 'பொது நலம் கருதி' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்க, கோகுல் (சென்னை டூ சிங்கப்பூர், ஜாக் அண்டு ஜில் புகழ்), அஸ்வின் ஜெரோம் (யானும் தீயவன், நட்பே துணை புகழ்), மது ஷாலினி (அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி), சனா அல்தாஃப் (சென்னை 28 - 2, ஆர்.கே.நகர்) முக்கிய வேடங்களில் நடித்தவர். சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    ‘பஞ்சராக்ஷரம்’ தலைப்பு குறிப்பிடுவது போல, படம் சுமார் 5 நபர்கள், அதன் கதாபாத்திரங்கள் இயற்கையின் 5 வெவ்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஐதன் (தீ) ஒரு ஆர்வமுள்ள இசைக்கலைஞர், சமீரா (காற்று) ஒரு அறிவுசார் எழுத்தாளர், ஜீவிகா (நீர்) ஒரு உன்னத மனிதாபிமானி, தர்ணா (பூமி) ஒரு ஆர்வமுள்ள பந்தய வீரர் மற்றும் திஷ்யந்த் (வானம்) ஒரு உற்சாகமான ஆராய்ச்சியாளர். இந்த கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படுகின்றது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஒரு விளையாட்டை சமீரா பரிந்துரைக்கும் வரை விஷயங்கள் நன்றாகவே இருக்கிறது. நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.

    படத்தின் கதைக்களம் மிகவும் விதிவிலக்காகவும் தனித்துவமாகவும் காணப்பட்டாலும், இது இந்திய திரைப்படத் துறையில் முதல் முறையாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட பல வகைகளின் தொகுப்பாகும். இது ஒரு உளவியல் சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். 'பஞ்சராக்ஷ்ரம்' நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும். இசைக்கலைஞருடன், சிறப்பாக அமைத்த மேடை விளக்குகளில் குழு லைவ்-இன் கச்சேரியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளது. 75 வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பைக் மற்றும் பல கார்களின் துரத்தல்கள் என்று மூச்சடைக்கக்கூடிய அதிரடி காட்சிகளை பெரிய பட்ஜெட்டில் படமாக்கியுள்ளது. 

    இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27, 2019 அன்று வெளியிடப்படும்.
    எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்மாரி’ படத்தின் முன்னோட்டம்.
    எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது 25-வது படமாகும். ஜெய்க்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு காதல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

    கேப்மாரி படக்குழு

    இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஏ.எஸ்.மைக்கேல் சிவன் இயக்கத்தில் மகேஷ், கல்யாணி நாயர் நடிப்பில் உருவாகி வரும் நங்கூரம் படத்தின் முன்னோட்டம்.
    டைரக்டர் ஏ.எஸ்.மைக்கேல் சிவன் இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ்-மலையாள நடிகை கல்யாணி நாயர் ஜோடியாக நடிக்கும் படம் ‘நங்கூரம்’. ரேகா, நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ‘மகாநதி’ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடிக்கிறார்கள். கா.கலைக்கோட்டுதயம் தயாரிக்கிறார்.

    படத்தை பற்றி டைரக்டர் ஏ.எஸ்.மைக்கேல் சிவன் கூறும்போது, “இது, குற்றப்பின்னணி கதையம்சம் கொண்ட படம். நகரில், 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களை குறிவைத்து கொலைகள் நடைபெறுகின்றன. கொலைகாரன் யார்? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை ஒரு போலீஸ் அதிகாரி துப்பறிந்து கண்டுபிடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
    சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் ‘நான் அவளை சந்தித்த போது’ படத்தின் முன்னோட்டம்.
    சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘நான் அவளை சந்தித்த போது’. இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். 

    ஒளிப்பதிவு - ஆர்.எஸ்.செல்வா, இசை - ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள் - அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர், நல்.செ.ஆனந்த், கலை - ஜெய்காந்த் / எடிட்டிங் - ராஜாமுகம்மது, நடனம் - சிவசங்கர், பாலகுமாரன் - ரேவதி, தினேஷ், ஸ்டன்ட் - ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சம்பத், தயாரிப்பு - V.T.ரித்திஷ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர். 

    படம் இம்மாதம் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர். 
    இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' திரைப்படத்தின் முன்னோட்டம்.
    'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வடசென்னை' என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் 'அசுரன்' படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' படத்தை வெளியிடுகிறது.

    இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது, ‘கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் 'பாரம்'. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.

    இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது 'பாரம்' படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்காக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் 'பாரம்' படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து 'பாரம்' படத்தைத் தயாரித்திருக்கிறார். 

    இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத். 'பாரம்' திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.
    மாணிக்ஜெய் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் ‘பரமு’ படத்தின் முன்னோட்டம்.
    சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள படம் "பரமு". இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய். பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

    பரமு படக்குழு

    மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர். கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் " புள்ளீங்கோ" என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ' இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் பரமு. 
    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆதித்ய வர்மன், ரேணு சௌந்தர் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் மஞ்ச சட்ட, பச்ச சட்ட படத்தின் முன்னோட்டம்.
    “கல்கி” விருது பெற்றதன் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் எழுத்தாளர் தம்பா குட்டி பாம்ராஷ்கி. தற்போது இவர் முதல் முறையாக “மஞ்ச சட்ட, பச்ச சட்ட” எனும் நையாண்டி கலந்த முழு நீள காமெடி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    இயக்குநர் தம்பா குட்டி பாம்ராஷ்கி படம் குறித்து பேசுகையில், “மஞ்ச சட்ட பச்ச சட்ட” படம் நக்கல், நையாண்டி கலந்த முழு நீள காமெடி படமாக உருவாகவுள்ளது. படத்தின் முக்கிய அம்சமாக நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது. புத்திசாலித்தனமான பேச்சுக்கள் நகைச்சுவையாய் மாறும் அடிப்படையை மையமாக கொண்டதாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. 

    இந்த வகை படங்கள் மற்றும் சீரிஸ்கள் உலகம் முழுதும் பெரிதும் பிரபலம். நக்கல் நையாண்டி கலந்து இருக்கும் இந்த வகை படம் தமிழில் ஒரு புதிய அனுபவத்தை தருவதுடன் புன்னகையை நெஞ்சில் ஏற்றுவதாகவும் இருக்கும் என்றார்.

    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆதித்ய வர்மன், ரேணு சௌந்தர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, குரு சோமசுந்தரம் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் லான்சல் டெல் வாஸ்தோ, சின்னசாமி மௌனகுரு, ராஜ்குமார், பெக்கி ஷிவ் ஷங்கர், அதியா கதிர் பாலகுரு, ஏகே சரவணன், யுவராம கிருஷ்ணன், அமீர், ஏகேடி முருகன், ஏகே.ஜெயவேல் மாரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைக்க, எம்ஆர்எம் ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தியாகு எடிட்டிங் செய்ய, சிவ யோகா கலை இயக்கத்தை கையாள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்  நடக்கவுள்ளது.
    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    தினேஷ், ஆனந்தி

    நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறுகிறார்.
    யுவராஜ் இயக்கத்தில் ரக்‌ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கடலில் கட்டுமரமாய்’ படத்தின் முன்னோட்டம்.
    விவசாயிகளையும் அவர்களது தற்போதைய நிலையையும் மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ’கடலில் கட்டுமரமாய்’.  யுவராஜ் முனிஷ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை முனுசாமி தயாரித்துள்ளார். கதாநாயகனாக ரக்‌ஷன், கதாநாயகியாக ரித்திகா நடித்துள்ளனர். தயாரிப்பாளர் முனுசாமி பேசும்போது, இப்படம் வரலாறு படைக்கும் திரைப்படமாக இருக்கும்.  

    கடலில் கட்டுமரமாய் படக்குழு

    இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுவதும் படத்தில் இருக்கிறது’ என்றார்.
    அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் 'திருவாளர் பஞ்சாங்கம்' படத்தின் முன்னோட்டம்.
    அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் 'திருவாளர் பஞ்சாங்கம்'. இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.

    இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்...

    ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.

    அப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.

    இப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.
    சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகன்கனா சூர்யவன்ஷி நடிப்பில் உருவாகி இருக்கும் ’தனுசு ராசி நேயர்களே’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் தனுசு ராசி நேயர்களே. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான், டிகன்கனா சூர்யவன்ஷி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

    இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.

    தனுசு ராசி நேயர்களே படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கூறும்போது, 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவற்றை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். என கூறினார்.
    ×