என் மலர்
முன்னோட்டம்
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கால் டாக்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.
இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மனோஜ் ராம் இயக்கத்தில் வித்தார்த், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் நட்சத்திரா படத்தின் முன்னோட்டம்.
மனோஜ் ராம் இயக்கத்தில் வித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் நட்சத்திரா. நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் ராகவன் இசையமைக்க, எம்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி குமரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது: மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த ஆச்சர்யங்களை ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். “நட்சத்திரா” படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும் என்றார்.
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜபீமா திரைப்படத்தின் முன்னோட்டம்.
ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் ”மாயன்” படத்தின் முன்னோட்டம்.
சிவனையும், மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாயன். இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிந்துமாதவியும் நடித்துள்ளனர்.
சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். பிரபல நடிகர்களான ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தெறி தீனா, ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்ஜினி அகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இந்தியாவின் ஃபாக்ஸ் அண்ட் கிரவ் ஸ்டூடியோஸ் நிறுவனமும் மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர். மோகன சுந்தரத்தின் ஜி.வி.கே.எம். எலிபண்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
டி.ஆர்.எல். இயக்கத்தில் அஸார், ஸ்ரீபிரியங்கா, பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் சாரல் படத்தின் முன்னோட்டம்.
டி.ஆர்.எல். இயக்கத்தில் ரெயின்போ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் ‘சாரல்’. இதன் நாயகனாக டி.வி.தொகுப்பாளர் அஸார், நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்கள். கோபால கிருஷ்ணன் ‘சாரல்’ படத்தின் கதாநாயகி தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். நாயகன் அஸார் நண்பர்களாக காதல் சுகுமார், பவர்ஸ்டார் சீனிவாசன், கோவை பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்.
வில்லனின் மூன்றாவது அடி ஆளாக இதில் பவர்ஸ்டார் நடிக்கிறார். இவர் முதல் அடி ஆளாக வரவேண்டும் என்று ஆர்வகோளாறால் ஏற்படும் சம்பவங்களே நகைச்சுவை கலகலப்பாக அமைந்திருக்கிறது. கோவை பாபு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு நாராயணன் படத்தொகுப்பையும், தவசி ராஜ் ஸ்டண்ட் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தமிழ் செல்வன் இயக்கத்தில் உதய், லீமா நடிப்பில் உருவாகி இருக்கும் “உதய்” படத்தின் முன்னோட்டம்.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் அடுத்ததாக இயக்கும் படம் உதய். உதய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி லீமா நடிக்கிறார். இப்படத்திற்கு தீபக் ஹரிதாஸ் இசையக்க, ஏ.எஸ்.ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய வேண்டும் என நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதல் சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே படம்.
சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள ”அவனே ஸ்ரீமன் நாராயணா” படத்தின் முன்னோட்டம்.
ரக்ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள படம் ”அவனே ஸ்ரீமன் நாராயணா”. அறிமுக இயக்குனர் சச்சின் ரவி இயக்கி, எடிட்டிங் செய்துள்ளார். கதாநாயகியாக ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், நாகர்ஜுன் ஷர்மா, அபிலாஷ், அனிருத் காட்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் எச்.கே.பிரகாஷ் மற்றும் புஷ்கரா மல்லிகார்ஜுனா இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சரண் ராஜ் மற்றும் பி அஜனேஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கன்னடத்தில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா நடிப்பில் ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சில்லுக்கருப்பட்டி படத்தின் முன்னோட்டம்.
சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. மேலும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது, ‘நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை’ என்றார்.
“சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். டிவைன் புரடொக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
பாவெல் நவகீதன் இயக்கத்தில் அருண் ராம் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ’வி1’ படத்தின் முன்னோட்டம்.
பாவெல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வி1. அருண் ராம் கேஸ்ட்ரோ நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணுபிரியா நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. வி1 என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான்.

இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “வி1” படத்தின் கதை. துப்பறியும் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பும், காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ படத்தின் முன்னோட்டம்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் உருவாகும் “பேட்டரி” படத்தின் முன்னோட்டம்.
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.
இயக்குநர் மணிபாரதி கூறியதாவது, 'உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்" என்றார்.
இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் செங்குட்டுவன் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். மேலும் “கைதி” படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி இருக்கும் “தபாங் 3” படத்தின் முன்னோட்டம்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். அர்பாஸ்கான், மாஹி கில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் ’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனட் பிரபுதேவா கூறியதாவது: இந்தப் படம் செய்ய முடிவான போது என்னை இயக்குவதற்கு அழைத்தார் சல்மான். படம் ஆரம்பிக்கும்போதே இதை நான்கு மொழிகளிலும் செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அப்போது முதலே அதற்காக உழைத்தோம். இது அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் கதை, எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.






