என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ரமேஷ் ஜி இயக்கத்தில் வருண் கிஷோர், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் அடவி படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அடவி. இப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

    அடவி படக்குழு

    படம் பற்றி இயக்குனர் ரமேஷ்ஜி கூறியதாவது:- ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும், அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
    டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அகோரி'. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, 'கலக்கப்போவது யாரு' சரத் ஆகியோரும் நடித்துள்ளனர். 

    அகோரி

    கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. ஃபோர் மியூசிக் எனும் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
    அன்பு இயக்கத்தில் சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தின் முன்னோட்டம்.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார்.

    இதுகுறித்து இயக்குனர் அன்பு கூறும்போது, ‘வால்டர் படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குனர் கௌதம் மேனனை அணுகினோம். அவரும் கதாப்பாத்திரம் பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகிறோம்.

    அவரது கதாபாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.

    இசை - தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - S. இளையராஜா, பாடல்கள் - அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம் - A.R. மோகன், நடனம் - தாஸ்தா, சண்டைப்பயிற்சி இயக்கம் - விக்கி, தயாரிப்பு மேற்பார்வை - K மனோஜ் குமார்.
    எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழில் 2017ல் வெளிவந்த அட்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிஷி ரித்விக். இவர் எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் மரிஜுவானா. இது ஒரு சைக்கோ திரில்லர் கதை கொண்ட படம். 'தேர்டு ஐ கிரியேஷன்' எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.  

    ரிஷி ரித்விக்

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:- ”ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். கதை உண்மையான சம்பவமே. மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம் தரும் .பெண்ணுக்கான பாதுகாப்பை சமூகம் கொடுக்க வேண்டுமா? இல்லை பெற்றோரின் பொறுப்பா? தவறுக்கு யார் காரணம்? என்னை பொறுத்தவரை பெற்றோர்களே. 40 வயது கடந்த பெண்கள் நிச்சயமாக இந்த படத்தை காண வேண்டும்” என கூறினார்.
    வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
    6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

    காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு இனியன் ஜே.ஹரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
    மைண்ட் ட்ராமா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் நினைவோ ஒரு பறவை படத்தின் முன்னோட்டம்.
    மைண்ட் ட்ராமா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை. இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார். 50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

    ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

    இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி.

    தற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    செ.ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி, சிவ நிஷாந்த், அய்ரா, திவ்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் முன்னோட்டம்.
    மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. செ.ஹரி உத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக அய்ரா, திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய் கிரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, வித்யாசாகர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல்  படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

    கல்தா

    படம் குறித்து இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. ஒரு தரமான கமர்ஷியல் படமா இத உருவாக்கியிருக்கோம் என கூறினார்.
    மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ’கட்டில்’. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.    

    கட்டில் படக்குழு    

    மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் ’தொட்டு விடும் தூரம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

    படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக்கும் காதல் மலர்கிறது. 

    விவேக்ராஜ், மோனிகா

    ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது. பின்னர் காதலியை தேடி அழகு சுரேஷ் சென்னை செல்கிறான். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், காதலியை சந்தித்தாரா என்ற கேள்விக்கு விடையும் மீதி கதை. வித்தியாசமான காதல் படமாக தயாராகி உள்ளது. படத்தை பார்த்துவிட்டு வரும்போது அதன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.
    மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’வன்முறை’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வன்முறை’. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில்  உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடித்துள்ளார். மேலும் வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். சிவ சுகுமாரன் இசையமைக்கும் இப்படத்திற்கு அய்யப்பன், ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

    ஆர்.கே.சுரேஷ்

    படம் பற்றி இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறும்போது, "தமிழகத்தில் அறிமுகமாவதில் நான் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள். இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்." என்கிறார். படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் "இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உருவாகியுள்ள படம்" என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்

    படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
    பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரிஷிகாந்த், மேஹாலி நடிப்பில் உருவாகி இருக்கும் 370 படத்தின் முன்னோட்டம்.
    பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘370’. இதில் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேஹாலி நடிக்கிறார். மற்றுமோரு வித்தியாசமான வேடத்தில் திருநங்கை நமிதா நடித்துள்ளார். 

    இன்று பரபரப்பாக உலகம் முழுவதும்  பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் ‘370’.  இதனை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் 48 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் நாயகன் ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோவாக நடிக்கிறார்.  
    ×