என் மலர்
முன்னோட்டம்
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முன்னோட்டம்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த `நாடோடிகள்' திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளா இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

மேலும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமுத்திரகனி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தனிகை, குவின்ஸி, வேல்முருகன் நடிப்பில் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் "கருப்பு கண்ணாடி" படத்தின் முன்னோட்டம்.
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் "கருப்பு கண்ணாடி". இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. சம்சாத் ஒளிப்பதிவை கவனிக்க, சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்கிறார். எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பாளர் ஆகவும், மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆகவும் பணியாற்ற உள்ளனர்.
அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் மாயநதி படத்தின் முன்னோட்டம்.
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாயநதி’. அபி சரவணன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், வெண்பா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் அஷோக் தியாகராஜன். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் முன்னோட்டம்.
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’.
அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமகேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.
கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.
சபேஷ் - முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
என்.கே.கண்டி இயக்கத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டே நைட்’ படத்தின் முன்னோட்டம்.
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.
டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் ‘சைக்கோ’ படத்தை தயாரித்துள்ளார். நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை. கவுதம் என்னும் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராம் சைக்கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் முன்னோட்டம்.
நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா.ஜி.ஆர்.என். ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி கூறியதாவது: “என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்யை பார்த்து பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள்.

இந்த கலவைதான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதுதான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்பு தன்மையுடன் இத்திரைப்படத்தில் செய்திருக்கிறேன்” என்றார்.
ஜெய் விஜயகுமார் இயக்கத்தில் வெண்ணிஸ் கண்ணா, சானியா ஐயப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் இறலி படத்தின் முன்னோட்டம்.
கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் 'இறலி'. வெண்ணிஸ் கண்ணா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். பிரதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராஜா இசையமைக்கிறார். ஒரு நல்ல கருத்துடனும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த 'இறலி' படம் உருவாகி இருக்கிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது, "இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். மீறி அதனை செயற்கை வழிக்கு இழுத்தால், அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக 'இறலி' இருக்கும். 'இறலி' என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளைவு என்பதே அதன் பொருள். ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை" என்கிறார் இயக்குனர்.
ஜெயகுமார், புன்னகை பூ கீதா தயாரிப்பில் தினேஷ், தீப்தி திவேஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் முன்னோட்டம்.
திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம்.
இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முன்னோட்டம்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்த படம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்.
டேக் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராஜன் தயாரிப்பில் எம்.வி.கிருஷ்ணா இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிரட்சி படத்தின் முன்னோட்டம்.
டேக் ஓகே கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ‘மிரட்சி’. நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குனர் எம்.வி.கிருஷ்ணா கூறியதாவது..
முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.
படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும்.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார்.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் டக்கர் படத்தின் முன்னோட்டம்.
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.
சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் ஜி.ஏ. படத்தொகுப்பு செய்கிறார்.






