என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    அமலா பால்

    இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
    ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

    ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன்

    இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கி மிகவும் பிரபலமான ‘கெக்க பெக்க’ எனும் குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி இருக்கிறது. 
    நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி வரும் கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    "லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் நிஜார் இயக்கும் படம் "கலர்ஸ்". இயக்குனர் நிஜார், நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனரான இவர் தமிழில் இயக்கும் முதல் படம் ‘கலர்ஸ்’.

    கலர்ஸ் படக்குழு

    ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான எஸ்.பி.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கி வரும் 2323 படத்தின் முன்னோட்டம்.
    மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத்  தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

    இந்த படம் பற்றி இயக்குநர் பேசும் போது, ‘இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். 

    நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
    இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத்  தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத்  தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.



    இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன். இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா, கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். 

    இவர்களுடன் 'எமன்' படப் புகழ் அருள் டி சங்கர், ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி, ஒரிசா பாலு, டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா, சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு டி.எம்.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த். வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்’ என்றார்.
    பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல், காருண்ய கேதரின் நடிப்பில் உருவாகி வரும் சோழநாட்டான் படத்தின் முன்னோட்டம்.
    பாரிவள்ளல் தயாரிப்பில் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கி வரும் புதிய படம் ‘சோழநாட்டான்’. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காருண்ய கேதரின் என்ற அழகி, நடிக்கிறார். மேலும் தென்னவன், நாகி நாயுடு, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், போஸ் வெங்கட், சீதா ஆகியோரும் நடிக்கிறார்கள். 

    விமல், காருண்ய கேதரின்

    மிக முக்கியமான ஒரு வில்லன் வேடத்தில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார். ‘சோழநாட்டான்’, வரலாற்று பின்னணியில், முழுக்க முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், விமல் நடிக்கிறார். வரலாற்று கதையில் இவர் நடிக்கும் முதல் படம், இதுவாகும்.
    வேல்ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அதையும் தாண்டி புனிதமானது' திரைப்படத்தின் முன்னோட்டம்.
    வேல்ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா, குஷி, வீன் ஷெட்டி, வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

    இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

    திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன்,  எடிட்டிங் - ஆர்.கே, இயக்கம் - ஆர்.வெங்கட்டரமணன்.
    டி.எம்.ஜெயமுருகன் இயக்கத்தில் கார்த்திக், அபிதா நடிப்பில் உருவாகி வரும் தீ இவன் படத்தின் முன்னோட்டம்.
    ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், டி.எம்.ஜெயமுருகன். ‘சிந்துபாத்’ என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு இசையமைத்திருப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டும் செய்து இருக்கிறார். படத்துக்கு, ‘தீ இவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

    அண்ணன்-தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படமாக உருவாகியுள்ள இதில் அண்ணனாக-கதையின் நாயகனாக கார்த்திக் நடிக்கிறார். அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கையாக ‘சேது’ அபிதா நடிக்கிறார். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே படங்களின் வரிசையில், இந்த படமும் இடம் பெறும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, பெரைரா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, அலிமிர்சாக் பின்னணி இசையமைக்கிறார். 
    விஜய சேகரன் இயக்கத்தில் நபிநந்தி, ஷரத், நிகாரிகா, சுவாசிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’எவனும் புத்தனில்லை’ படத்தின் முன்னோட்டம்.
    வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக ஷரத் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடித்துள்ளார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடித்துள்ளார். 

    எவனும் புத்தனில்லை படக்குழு

    மேலும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலுக்கு சினேகன் நடனம் ஆடியிருக்கிறார். 200 நடனக் கலைஞர்களுடன் அவர் நடனமாடியுள்ளார். இந்தப் படத்தை விஜய சேகரன் என்பவர் இயக்கி இருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். 
    அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், வாணி போஜன்

    படம் பற்றி அஷ்வத் கூறியதாவது: நமது நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு இந்த படம் ஒரு தீர்வு சொல்வதாக அமையும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறோம். படத்தை பார்க்கும் கணவன் மனைவிக்கு புரிதல் அதிகமாகும்’ என்றார்.
    வள்ளியம்மாள் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புறநகர் படத்தின் முன்னோட்டம்.
    வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் புறநகர்.

    இதில் கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.

    கதை, திரைக்கதை, சண்டை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மின்னல் முருகன். இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் எல்லாளன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இப்படம் பற்றி இயக்குனர் மின்னல் முருகன் கூறியதாவது, ‘சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’ என்றார்.

    விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இந்திரஜித் இசையமைத்துள்ளார்.
    தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

    ராதிகா, சரத்குமார்

    நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபல படகர் சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். 
    ராஜா கஜினி இயக்கத்தில் ரோஷன், ஹிரோஷினி கோமலி, பிரியங்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உற்றான்’ படத்தின் முன்னோட்டம்.
    ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் திரைப்படம் உற்றான். இப்படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். மேலும் வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுனந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஹோலிக் பிரபு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    உற்றான் படக்குழு

    1994ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை தான் இது.  காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளதாக இயக்குனர் ராஜா கஜினி தெரிவித்துள்ளார்.
    ×