என் மலர்
முன்னோட்டம்
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திரெளபதி’ படத்தின் முன்னோட்டம்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.

இது அனைத்து சமூகத்துக்குமான விழிப்புணர்வு தான். இதில் யாரையும் பெருமைப்படுத்தியோ, சிறுமைப்படுத்தியோ செய்த விழிப்புணர்வு அல்ல. அனைத்து தந்தை - மகளுக்குமான விழிப்புணர்வு. பாதிக்கப்படாமல் எந்தளவுக்கு விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முன்னோட்டம்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைத்துள்ளனர். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ''இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
மதயானைக்கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தேரும் போரும்’ படத்தின் முன்னோட்டம்.
மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் தேரும் போரும்.
இதில் கதாநாயகனாக அட்டக்கத்தி, குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்த தினேஷ் நடிக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும், லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர்.
இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க இருக்கிறது. "தேரும் போரும்" திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிப்பில் கார்த்திக் நடிக்கும் 'தீ இவன்' படத்தின் முன்னோட்டம்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.
ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சோழ வேந்தன், தேஜா ரெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் குட்டி தேவதை படத்தின் முன்னோட்டம்.
ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் குட்டி தேவதை. இப்படத்தில் சோழ வேந்தன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தேஜா ரெட்டி நடித்துள்ளனர். மேலும் இதில், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, வாசு விக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர் கணேஷ் இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பல முன்னணி இயக்குனர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே.அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். மு.மேத்தா, அமுதபாரதி இசையையும், நெளசத்- சூரியன் இருவரும் ஒளிப்பதிவையும், லான்சி - மோகன் இருவரும் படத்தொகுப்பையும், சதீஷ் நடனபயிற்சியையும், ஸ்பீடு மோகன் சண்டை பயிற்சியையும், சந்தோஷ் கலையையும், ஆறுமுகம் - கார்த்திக் ராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும் சி.செல்லன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர். பி.அறிவரசன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள இரும்பு மனிதன் படத்தின் முன்னோட்டம்.
ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரும்பு மனிதன்’. இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடல்களை மோகன்ராஜ், நிரஞ்சன் பாரதி, டிஸ்னி எழுத கே.எஸ்.மனோக் இசை அமைக்கிறார்.

கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, கலை கே.மதன் கவனிக்க, ஆக்ஷன் பிரகாஷ் ஸ்டன்ட் செய்ய, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் டிஸ்னி. இப்படம் குறித்து இயக்குனர் டிஸ்னி கூறுகையில், இந்த படத்தின் திரைக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கிறது. இதை ஒரு உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து எடுப்பதாகவும், படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்.
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் படம் ‘பொம்மை’. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்.எச். எல்.எல்.பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படத்தொகுப்பு - ஆண்டனி, கலை கே.கதிர், பாடல்கள் - கார்க்கி, நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், வசனம் - எம்.ஆர்.பொன் பார்த்திபன், காஸ்டியும் டிசைனர் - சுபஶ்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன், ஸ்டில்ஸ் - ராமசுப்பு, எக்சிகியுடிவ் புரொடுயுசர் - நிர்மல் கண்ணன் மேக்கப் - மாரி
போஸ் வெங்கட் இயக்கத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ ராம், காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி மாடம் படத்தின் முன்னோட்டம்.
தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் ஜெ இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்தின் முன்னோட்டம்.
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறியதாவது: 'டைட்டானிக்' படம் தொடங்கி 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தின் கதைக்கு அவ்வளவுதான் தேவைப்பட்டது. அந்த 25 நாட்களிலேயே சுமார் 60 நாட்களுக்கான செலவு பண்ணினார்கள். இந்தக் கதையைப் படிக்கும்போது 'ஆண் பாவம்' படம் ஞாபகம் வந்தது. அந்தத் தலைப்பைக் கேட்டேன், தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.

பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என 4 காதல்கள் படத்தில் உள்ளன. ஒரு ஜாலியான படமாக இருக்கும்.'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு வேலை முடியும் என்றால், அதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நீ பெரிய ஆளல்லை. ஒரு கோடி ரூபாய் வேலையை 10 லட்ச ரூபாயில் முடித்தால்தான் நீ பெரிய ஆள்' என்று அப்பா சொல்வார். அதைத்தான் நான் செய்து வருகிறேன்”. என கூறினார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் காடன் படத்தின் முன்னோட்டம்.
ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காடன்’. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 02ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தின் முன்னோட்டம்.
கிராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தை கே.எஸ்.ராமா ராவ் தயாரித்துள்ளார்.

காதாலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜெய கிருஷ்ணா கும்மாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாஹி சுரேஷ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள இப்படத்தில், வெங்கடெஷ்வர ராவ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஃபியா படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. குற்றப் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியதாவது: ‘மாஃபியா - பாகம் 1’ போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை.

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என கூறியுள்ளார்.






