என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்தீப் கிசன், ரெஜினா கசான்ட்ரா, ஸ்ரேயா நடித்துள்ள அசுரவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    லட்சுமி வாசந்தி புரொடக்‌ஷன் சார்பாக ஏ.வெங்கட்ராவ் மற்றும் எஸ் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் பி.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் "அசுரவம்சம்". 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "நட்சத்திரம்" படத்தின் தமிழாக்கமே இந்த "அசுரவம்சம்". இந்த படத்தில் சந்தீப் கிசன் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ராவும் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, சாய் தருண் தேஜ், பிரக்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்ரேயா

    கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷனர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷனர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா வம்சி. 
    அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கத்தில் ஆதித் அருண் நடிப்பில் உருவாகி வரும் ரீல் அந்து போச்சு படத்தின் முன்னோட்டம்.
    “காலிடஸ் மீடியா” தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கும் “ரீல் அந்து போச்சு”.இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இப்படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார். பாஸ்கர் சுப்ரமணியன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். காலிடஸ் மீடியா சார்பில் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

    ரீல் அந்து போச்சு படக்குழு

    படம் குறித்து நாயகன் ஆதித் அருண் கூறியதாவது: “இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாகள்  நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் “ரீல் அந்து போச்சு”, என்றார்.
    மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி எம்.எம்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பில் உருவாகும் அஹம் பிரம்மாஸ்மி படத்தின் முன்னோட்டம்.
    மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி எம்.எம்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் வழங்கும் படம் ‘அஹம் பிரம்மாஸ்மி’. இப்படம் அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.

    இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. மெகா பவர் ஸ்டார் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

    ஶ்ரீகாந்த் என் ரெட்டி இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இசை - அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி, ஒளிப்பதிவு - சன்னி குருபாதி, பாடல்கள் - ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம், படத்தொகுப்பு - தம்மிராஜு, கலை இயக்கம் - விவேக் AM, சண்டைப்பயிற்சி இயக்கம் - பீட்டர் ஹெய்ன், கூடுதல் வசனங்கள்- திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி, இணை இயக்கம் - தொட்டம்புடி சுவாமி, நிர்வாக தயாரிப்பாளர் - வெங்கட் சல்லகுல்லா.
    கீரா இயக்கத்தில் சமுத்திரகனி, சாந்தினி, நித்தீஸ் வீரா நடிப்பில் உருவாகி இருக்கும் எட்டுத்திக்கும் பற படத்தின் முன்னோட்டம்.
    கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "எட்டுத்திக்கும் பற". வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    எட்டுத்திக்கும் பற படக்குழு

    படம் குறித்து இயக்குனர் கீரா கூறியதாவது: "எட்டுத்திக்கும் பற" சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. 'பற' என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. 'பற' என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
    ஞானி பாலா இயக்கத்தில் பிரித்திப், பூர்னிஷா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் முன்னோட்டம்.
    ஞானி பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஒபாமா உங்களுக்காக’. பிரித்திப் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்னிஷா நடித்துள்ளார். விஜய் சேதுபது சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். ஜெயசீலன் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

    ஒபாமா உங்களுக்காக படக்குழு


    படம் குறித்து இயக்குனர் ஞானி பாலா கூறியதாவது:- “ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். ‘ஒ’ என்பது கதாநாயகனின் ‘இனிஷியல்.’ ‘பாமா’ என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், ‘ஒபாமா.’ இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம், இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார்.
    அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.  சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது.

    அனூப் காலித், பரத்

    வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர்  சுனிஷ் குமார்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் முன்னோட்டம்.
    'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மனோஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். 

    சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

    பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.
    ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
    ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஜிப்ஸி படக்குழு


    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: ‘ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட வி‌ஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா’ என அவர் கூறினார்.
    பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படத்தின் முன்னோட்டம்.
    உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.

    இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.

    இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

    ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.

    சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வருகிறது.
    கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.
    இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

    லூமியெர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ராபின் ஹுட்.

    இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின் ஹுட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - இக்பால் அஸ்மி, இசை - ஸ்ரீநாத் விஜய், பாடல்கள் - கபிலன், வசனம் - ஜோதி அருணாச்சலம், எடிட்டிங் - ஜோமின், கலை - கே.எஸ்.வேணுகோபால், நடனம் - நந்தா, தயாரிப்பு மேற்பார்வை - சார்ல்ஸ், தயாரிப்பு - ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் - கார்த்திக் பழனியப்பன். 
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
    நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

    நிவேதா பெத்துராஜ், பிரபுதேவா

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. 
    இயக்குனர் சாமி இயக்கத்தில் மாஹின், டாவியா நடிப்பில் உருவாகி வரும் அக்கா குருவி படத்தின் முன்னோட்டம்.
    புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குனர் சாமி, அதனை தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

    அக்கா குருவி படக்குழு

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    ×