என் மலர்
முன்னோட்டம்
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.
‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் முன்னோட்டம்.
தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வேட்டை நாய். நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடித்துள்ளார். மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் பேசும்போது "படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை என கூறியுள்ளார்
த.வினு இயக்கத்தில் பிரிட்டோ, அப்ஷரா, ரேஷ்மா நடிப்பில் உருவாகி வரும் தூங்கா கண்கள் படத்தின் முன்னோட்டம்.
கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் "கைதி" ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் "தூங்கா கண்கள்". 70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படயாக வைத்து உருவாகியிருக்கும் படம் "தூங்கா கண்கள்". இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
தென் தமிழகத்தில் "வாதை" என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து த.வினு உருவாக்கியிருக்கும் படம் "தூங்க கண்கள்". கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜார்ஜ் படம் முழுக்க நடித்திருக்கும் படம் இது.
இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். துரை சுதாகர், த.வினு நிக்கேஷ் ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் தயாராகிறது.
இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். அவருடன் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமி’ படத்தின் முன்னோட்டம்.
ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் லட்சுமண் கூறியதாவது:- “விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருக்கிறது. ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக வருகிறார். அவர் தஞ்சாவூருக்கு திரும்பி விவசாயத்தை காப்பாற்ற போராடுவதும் அதற்கு பின்னணியில் உள்ள சம்பவங்களும் கதை. நமது நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் இல்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளை படம் பேசும். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாய கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிக ரீதி படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக இது தயாராகி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் பல்லு படாம பாத்துக்க படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜாம்பி கதைகளத்த்தை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் பிரபஞ்சன், ஆரா நடிப்பில் உருவாகி வரும் “ஒன் வே” படத்தின் முன்னோட்டம்.
ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “ஒன் வே”. இப்படத்தை இயக்குநர் எம்.எஸ். சக்திவேல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன்ணனி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆரா அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். “கோலமாவு கோகிலா” பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார்.

மேலும் ஜோக்கர் பாவா செல்லதுரை, கன்னத்தில் முத்தமிட்டால் ஹஷி குமார், கடாரம் கொண்டான் ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், துப்பறிவாளன் பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங்காலி சினிமாவில் புகழ்பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ‘லிப்ட்’ படத்தின் முன்னோட்டம்.
ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் படம் ‘லிப்ட்’. கவின் நாயகனாவும், அம்ரிதா ஐயர் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர்.
யுவா கேமராமேனாக இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார். ஸ்டன்னர் சாம் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.
படத்தின் ஜானர் திரில்லர் வகையைச் சார்ந்தது. படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி from நடுக்காவேரி படத்தின் முன்னோட்டம்.
அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கமலி from நடுக்காவேரி. இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதை தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.
ராம்தேவ் இயக்கத்தில் மீரான், மேகனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பழகிய நாட்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை தான் இந்த படம்.
சண்டைக் காட்சிகள் இன்றி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரகுரு படத்தின் முன்னோட்டம்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரகுரு’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிரடியான திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் முன்னோட்டம்.
8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.






