என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா  செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சசிகுமார்,  மடோனா  செபாஸ்டியன்

    1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டான் பாஸ்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜீ சுந்தரம் நடனத்தில், மைக்கேல்ராஜ் கலையில் இப்படம் உருவாகி வருகிறது. 
    நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் முன்னோட்டம்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    அவருடன் ஊர்வசி, மவுலி, இந்துஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 
    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் குமார் இயக்கி நடிக்கும் ஜிகிரி தோஸ்து படத்தின் முன்னோட்டம்.
    நடிகரும், குறும் பட இயக்குனருமான விக்னேஷ் குமார் 5 விருதுகளை வென்ற குறும் படங்களை டைரக்டு செய்ததன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். திறந்த புத்தகம், யாத்ரிகன், நீங்க நல்லவரா, கெட்டவரா? உள்பட 9 குறும் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறார். சைமா விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளார்.

    `ஜிகிரி தோஸ்து' படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். பிக்பாஸ் ஷாரிக், ஆர்.என்.ஆர்.மனோகர், துரை சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விக்னேஷ் குமார் படத்தை இயக்கி நடிப்பதுடன், ஆர்ஜுன், ஹக்கா ஆகியோருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். நட்பின் பெருமை சொல்லும் படமாக இது தயாராகிறது.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் முன்னோட்டம்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    அரவிந்த் சாமி

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில்  விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.  விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. 
    புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

    ராஜவம்சம்  படக்குழு

    மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. 
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முன்னோட்டம்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    சக்ரா படக்குழு

    பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.  
    ஜே.வாழவந்தான் இயக்கத்தில் ஜே.பி., துர்கா, வைஷாலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏமாத்த போறேன் படத்தின் முன்னோட்டம்.
    ``டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி, பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடும் ஆசாமிகளை பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. உண்மை சம்பவங்களின் தொகுப்பாக-பெண்களை எச்சரிக்கும் படமாக இது தயாராகியுள்ளது. படத்துக்கு, `ஏமாத்த போறேன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    படத்தை பற்றி அதன் டைரக்டர் ஜே.வாழவந்தான் கூறியதாவது:- ``தற்போதைய சமுதாயத்தில் ஏமாறும் பெண்கள் அதிகரித்து இருப்பது போல், அவர்களை ஏமாற்றும் ஆசாமிகளும் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு காரணம், சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். இதுபற்றி இந்த படம் பேசுகிறது. திரைக்கதையில் பல உண்மை சம்பவங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    ஏமாத்த போறேன் படக்குழு

    இப்படிப்பட்ட குற்றங்கள் புரிபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.

    அறிமுக நடிகர் ஜே.பி. கதாநாயகனாக நடிக்க, துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டா வது கதாநாயகியாக வைஷாலி நடித்துள்ளார். அன்னை சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜே.பி.துர்கா தயாரித்து இருக்கிறார்.''
    செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் வணங்காமுடி படத்தின் முன்னோட்டம்.
    மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் படம் `வணங்காமுடி'. செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து வணங்காமுடி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    வணங்காமுடி படக்குழு

    இப்படத்தில் அரவிந்த்சாமி ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர் சாதுர்யமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் படத்தின் முன்னோட்டம்.
    ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

    குருதி ஆட்டம் படக்குழுவினர்

    படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம். 

    பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.
    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    அனுஷ்கா

    4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கு சூரரைப் போற்று படத்தின் முன்னோட்டம்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சூர்யா

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
    ×