என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார்.
    அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் முன்னோட்டம்.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    இதில் ஜோதிகா உடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மி சரவணகுமார், பொன் பார்த்திபன், பெட்ரிக் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனிக்கிறார்.
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கும் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் முன்னோட்டம்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  உருவாகி வருகிறது.
    டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
    யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

    ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
    அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.
    ராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்திருக்கும் படம் ’தண்டகன்’. அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும்,  மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராட்சசன் வில்லன் 'நான்' சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

    இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர். 
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்

    படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
    அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படத்தின் முன்னோட்டம்.
    'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    அந்தகாரம் என்றால் புதையல்கள் நிறைந்த ஒரு இடம். அந்த இடத்தை சாத்தான்களும், பிசாசுகளும் பாதுகாக்கிறது என்று குறிப்பிடுகிறது பைபிள்.  

    படம் குறித்து இயக்குனர்  விக்னராஜன் கூறியதாவது: இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இப்படம் முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூன்று கதைகள் அவை ஒன்றோடொன்று தொடர்பு இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பை 2016-ல் தொடங்கினோம், கடந்தாண்டு நிறைவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா.யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.

    இதுபற்றி அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் சக்தி சிதம்பரம் கூறுகிறார்: ‘‘பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான். 

    அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. 

    நாங்கள் படப்பிடிப்பை தொடங்கும்போது, கொரோனா பற்றி உலகுக்கு தெரியாது. அந்த உயிர் கொல்லி நோய் தொடர்பான காட்சிகளை திகிலாக படமாக்கி இருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கிராமங்களில் நடைபெற்றது. சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம்.
    விஜய்யின் 64-வது படம் `மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

    மேலும்  சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், மகேந்திரன், விஜே ரம்யா, அழகம் பெருமாள், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யன், சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆடை, மேயாதமான் போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 

    விஜய்

    இப்படத்தில் இடம்பெறும் குட்டி ஸ்டோரி பாடலை விஜய் பாடியுள்ளார். அதேபோல் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தின் முன்னோட்டம்.
    இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்" என்று இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

    பாரிஸ் பாரிஸ்

    தயாரிப்பாளர் மனுகுமரன், "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார். 
    நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜபீமா திரைப்படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    ஆரவ்

    ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்கோத் படத்தின் முன்னோட்டம்.
    மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் படம் பிஸ்கோத். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். 

    இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 
    ×