என் மலர்
முன்னோட்டம்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் முன்னோட்டம்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்து வரும் புதிய படம் ‘திட்டம் இரண்டு.’ திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும் படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் டைரக்டு செய்கிறார்.
‘திட்டம் இரண்டு’ படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது: “ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.”
அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் சின்ட்ரெல்லா படத்தின் முன்னோட்டம்.
ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சின்ட்ரெல்லா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இவர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரம்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
‘சின்ட்ரெல்லா’ படத்தை பற்றி அவர் கூறியதாவது: “இது, மாயாஜாலமும், மர்மங்களும் நிறைந்த படம். இந்த படத்தில் ராய்லட்சுமிக்கு 3 வேடங்கள். தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய குழுவைச் சேர்ந்த பெண், ‘துளசி’ என்ற வீட்டு வேலை செய்யும் பெண் என மூன்று வேடங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ராய் லட்சுமி.

‘சின்ட்ரெல்லா’ என்ற அழகான பெண்ணின் ஜோடியாக ஒரு வெளிநாட்டுக்காரர் நடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். சென்னையிலும், அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சுமோ படத்தின் முன்னோட்டம்.
வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து, சிவா-பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம், ‘சுமோ.’ இந்த படத்தை ஹோசிமின் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ‘சுமோ’ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன.

படத்தை பற்றி இயக்குனர் ஹோசிமின் கூறியதாவது:- ‘‘சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது. கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார்.
டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா நடிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி படத்தின் முன்னோட்டம்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் டீகே. ஒளிப்பதிவு பணிகளை விக்கி கவனிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை பிரவீன்.எச்.எல். மேற்கொண்டுள்ளார்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள பார்ட்டி படத்தின் முன்னோட்டம்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு எழிலரசு குணசேகரன் வசனம் எழுதியுள்ளார். கங்கை அமரன், கருணாகரன்.பி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக உள்ள புஷ்பா படத்தின் முன்னோட்டம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், பாபி சிம்ஹா வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக நடிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
அருண்விஜய்யின் 30 வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர். கமர்சியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் அச்சுறுத்திய நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது.

முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார்.
வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முன்னோட்டம்.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
அதேபோல் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்காதே படத்தின் முன்னோட்டம்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார் என்றார்
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு, இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு - ஏ.எம்.ராஜா முகமது, கலை - ஜி.துரைராஜ், பாடல்கள் - ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி ஆக்ஷன் - ராஜசேகர், கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ரவி அரசு.






