என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
    மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும்  இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். 

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஷிரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம்.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    டிக்கிலோனா படக்குழு

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார்.
    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். 

    மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
    எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
    மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 

    கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    ஜே பார்த்திபன் இயக்கத்தில் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாக்கி இருக்கும் மிருகா படத்தின் முன்னோட்டம்.
    'ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

    ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

    இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா'.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் மூன்றாவது படம் இது.

    பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

    நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வை – கணேஷ்

    இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.
    1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள 83 படத்தின் முன்னோட்டம்.
    விளையாட்டுப் போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்கள், எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது. 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய அணி சிறப்பாக ஆடி, இறுதி சுற்று வரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணி வீரர்களே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உண்மை சம்பவங்களுடன் சில சுவாரசியமான சம்பவங்களையும் சேர்த்து, 83 படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

    தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன், இந்தூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கபீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.
    சுந்தர்பாலு இயக்கத்தில் திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கர்ஜனை படத்தின் முன்னோட்டம்.
    திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுகூனம் சார்பில் ஜோன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

    திரிஷா சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்லும்போது ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பது நாயகியின் பாத்திரம். இதில் அதிரடியான சண்டை காட்சிகளிலும் திரிஷா துணிச்சலாக நடித்திருக்கிறார். ஒரு கரடி சண்டையும் இடம் பெறுகிறது. ஒரே நாள் இரவில் சம்பவங்கள் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘கர்ஜனை’ தயாராகி இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
    எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்தின் முன்னோட்டம்.
    கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். 

    விமல், வரலட்சுமி

    இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இதில், விமலும், வரலட்சுமியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதும் விமலும், வரலட்சுமியும் இடம் பெறும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்றார்.
    சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

    படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி' என அவர் கூறினார்.
    எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் முன்னோட்டம்.
    ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள். எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இது உருவாகி உள்ளது. கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    ×