என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம்.
    கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கபெ.ரணசிங்கம் படக்குழு

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
    அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 

    மாறா படக்குழு

    இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் காடன் படத்தின் முன்னோட்டம்.
    ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காடன்’. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும்  இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    விஷ்ணு விஷால்

    இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார்.
    அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் `காதலிக்க யாருமில்லை' படத்தின் முன்னோட்டம்.
    கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் `காதலிக்க யாருமில்லை'. திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    காதலிக்க யாருமில்லை படக்குழு

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். குறும்படம் இயக்கி பிரபலமான கமல் பிரகாஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
    கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என 4 பேர் நாயகிகள். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    தேவதாஸ் பிரதர்ஸ் படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும் என கூறியுள்ளார்.
    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    நந்திதா ஸ்வேதா

    படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
    ஜேம்ஸ்வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள 'ஓ அந்த நாட்கள்' படத்தின் முன்னோட்டம்.
    மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

    இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். 

    ஓ அந்த நாட்கள் படக்குழு

    ‘ஓ அந்த நாட்கள்’ பற்றி ஜேம்ஸ்வசந்தன் கூறியதாவது: “இது, காதலும் நகைச் சுவையும் கலந்த படம். 1980-களில் கதாநாயகிகளாக இருந்த ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் நடித்த 4 வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்புலமாகவும், அவர்களின் தற்போதைய வாழ்க்கையை அடித்தளமாகவும் வைத்து முற்றிலும் வித்தியாசமாக, குடும்பப் பாங்காக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.’’என அவர் கூறினார்.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

    ரவீனா ரவி, சுரேஷ்

    பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
    விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் பாக்ஸர் படத்தின் முன்னோட்டம்.
    அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் பாக்சிங் பயிற்சி எடுத்து நடித்துள்ளார்.

    அருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
    மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் அக்னிச்சிறகுகள் படத்தின் முன்னோட்டம்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

    அக்னிச்சிறகுகள் படக்குழு

    மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே முன்னோட்டம்.
    `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கும் அடுத்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். 

    மேலும் சதீஷ், பூமிகா,  மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் முன்னோட்டம்.
    ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அஜ்மல் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. 

    நெற்றிக்கண் படக்குழு

    'பிளைண்டு' படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார். 

    சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.
    ×