என் மலர்
முன்னோட்டம்
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் நடித்துள்ள கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.
"வி ஸ்டுடியோஸ்" நிறுவனம் ஸ்ரீ சரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ள படம் 'கண்ணாடி', இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி உள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கே.எல்.பிரவீன் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தின் முன்னோட்டம்.
பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கின்றனர். மேலும் ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் முன்னோட்டம்.
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: “இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.

கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்ததாக அவர் கூறினார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் முன்னோட்டம்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.
நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.

பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பெண்குயின்'. அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: "கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன்.
இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என கூறினார்.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயாரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் முன்னோட்டம்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியதாவது: “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார்” என்றார்.
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுகம் தினேஷ், ‘தடம்’ பட நாயகி ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் 'பற்ற வைத்த நெருப்பொன்று' படத்தின் முன்னோட்டம்.
செல்போன் திருட்டை கருவாக கொண்டு, ‘பற்ற வைத்த நெருப் பொன்று’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. புதுமுகம் தினேஷ், ‘தடம்’ பட நாயகி ஸ்மிருதி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். வினோத் ராஜேந்திரன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: “ஒவ்வொரு மனிதருக்கும் மூன்றாவது கை போல் இருப்பது, செல்போன். நமது மனசாட்சிக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவும் செல்போனுக்கும் தெரியும். அதனுள் சேமித்து வைத்த விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். அதுபற்றிய கதை, இது.

செல்போன் தகவல்களை திருடி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பற்றிய படம். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் இந்த பிரச்சினை எவ்வாறு விபரீதமாகிறது? என்பதை எச்சரிக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

முற்றிலும் கிராமிய பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.
இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ராபின் ஹுட்.

இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின் ஹுட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
செல்வேந்திரன் இயக்கத்தில் நீலிமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் முன்னோட்டம்.
செல்வேந்திரன் இயக்கத்தில் நீலிமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கருப்பங்காட்டு வலசு’. இப்படத்தில் எபிநேசர் தேவராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதுடன், நிர்வாக தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆதித்யா-சூர்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷ்ரவன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். crew 21 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
படம் குறித்து நடிகை நீலிமா கூறியதாவது: இது, குற்றப்பின்னணி உள்ள திகிலான கதையம்சம் கொண்ட படம். பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை ‘மாடர்ன்’ ஆக மாற்ற முயற்சிக்கிறாள், ஒரு பெண். அப்போது அந்த ஊரில், ஒரு குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள்தான் திரைக்கதை" என தெரிவித்துள்ளார்.
விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் முன்னோட்டம்.
ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.






