என் மலர்
முன்னோட்டம்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள அயலான் படத்தின் முன்னோட்டம்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாக இருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் முன்னோட்டம்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளார்.
மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
மணி கார்த்திக் இயக்கத்தில் லிங்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தடயம் முதல் அத்தியாயம் படத்தின் முன்னோட்டம்.
மணி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தடயம் முதல் அத்தியாயம்'. உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்டுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இதில், கதையின் நாயகனாக பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, நடித்திருக்கிறார். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். விஐய் அன்டரிவ்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் மணி கார்த்திக் கூறியதாவது: போலிஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்கப்பட்டுள்ளது. தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமி’ படத்தின் முன்னோட்டம்.
ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் லட்சுமண் கூறியதாவது: விவசாயிகளின் பிரச்சினைகளை படம் பேசும். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாய கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிக ரீதி படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக இது தயாராகி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தின் விமர்சனம்.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.
மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தின் முன்னோட்டம்.
கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன்ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். ’எம்.ஜி.ஆர் மகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் இயக்குநர் பொன்ராம் கவனித்துள்ளார். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் யோகிபாபு, சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.
யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்' என்ற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார். `காக்டெயில்' படத்தை பற்றி அவர் கூறியதாவது: ``இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாசிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ரவீண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைப்படி, யோகி பாபுவும், அவருடைய நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார்கள். கொலையானது யார், அந்த கொலையை செய்தது யார், அதில் இருந்து யோகி பாபுவும், நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள்? அதில் பறவையின் பங்கு என்ன? என்பதே கதை.'' என கூறினார்.
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கா படத்தின் முன்னோட்டம்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் நாஞ்சில் கூறியதாவது: ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் பஹிரா படத்தின் முன்னோட்டம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹிரா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும் போதே இந்த கதையை சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்க சென்றுவிட்டார். அந்த படங்களை முடித்த கையோடு வந்து பஹிரா படத்தில் நடித்து கொடுத்தார். இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என கூறினார்.






