என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

    ராஜவம்சம் படக்குழு

    மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.
    சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

    படம் பற்றி இயக்குனர் சந்தானமூர்த்தி கூறுகையில், ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி' என அவர் கூறினார்.
    மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடிக்கும் கர்ணன் படத்தின் முன்னோட்டம்.
    தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். 

    யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

    தனுஷ்

    யுகபாரதி பாடல்களை எழுதி உள்ளார். திலீப் சுப்புராயன் ஸ்டாண்ட் பணிகளை கவனிக்கிறார். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
    நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜபீமா படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.  ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
    புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதிராவ் நடிப்பில் உருவாகும் துக்ளக் தர்பார் படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் அதிதிராவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். 

    மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். 
    நித்தின் சத்யா தயாரிப்பில் வெங்கட் பிரபு, வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீசர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ஜி5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.

    மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ஜி5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜி5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

    இந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார். அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் - எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார்.
    மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் மதியழகன் நடிக்கும் பிதா படத்தின் முன்னோட்டம்.
    மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'பிதா'.  படத்தின் இயக்குனர் ஆதித்யா, ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கியவர். இயக்குனர் மிஷ்கினின் தம்பி. ராதாரவி, ரமேஷ் திலக், கலையரசன், புதுமுகம் அனுகீர்த்திவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    பிதா படக்குழு

    ஒரு தந்தைக்கும், மகளுக்குமான பாசத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம், இது. காணாமல் போன மகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பரிதாபத்துக்குரிய தந்தையின் தேடலே திரைக்கதை. அந்த தந்தையின் தீவிரமான தேடலில் ஏற்படும் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது. அப்பாவாக மதியழகன் நடிக்கிறார். 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கும் மாநாடு படத்தின் முன்னோட்டம்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 

    மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
    இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டைரி படத்தின் முன்னோட்டம்.
    பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் டைரி. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

    உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வேலைகள் நடைபெற்று வருகிறது.
    ஜா.ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன்பது குழி சம்பத் படத்தின் முன்னோட்டம்.
    ஜா.ரகுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒன்பது குழி சம்பத்'. புதுமுக நாயகன் பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லி இசையமைத்துள்ள இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தை பற்றி இயக்குனர் ஜா.ரகுபதி கூறியதாவது: “கிராமத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கோலி விளையாடியபடி திரிந்து கொண்டிருக்கிறான், ஒரு இளைஞன். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. ‘சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திகில் படம், இது.

    ஒன்பது குழி சம்பத் படக்குழு

    தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத கிராமத்தில் நிகழும் சம்பவங்களே திரைக்கதை. இதற்காக பல கிராமங்களை பார்த்து, இறுதியாக திருச்சி அருகில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். படம், ‘ஆன்லைன்’ தியேட்டரில் வெளியாகும்.” என கூறினார்.
    சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது: வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். 

    கன்னித்தீவு படக்குழு

    அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.
    எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் முன்னோட்டம்.
    ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் படம் அலேகா. ஆரி அர்ஜுனா நாயகனாக  அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

    ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா

    சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகா, யுகபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதி உள்ளனர். ஆர்.விஜயகுமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 
    ×