என் மலர்
முன்னோட்டம்
சாய் எம்.கே.செல்வம் இயக்கத்தில் புதுமுகங்கள் ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பச்சைக்கிளி படத்தின் முன்னோட்டம்.
பெண்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு சீர்குலைத்து கொல்லப்படுவதை கருவாக வைத்து, ‘பச்சைக்கிளி’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் தயாராகியிருக்கும் இந்த படத்தை சாய் எம்.கே.செல்வம் இயக்கியிருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: “பெண்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், சில காட்சிகளில் நெகிழ்ந்துவிட்டார்கள். இறுதி காட்சியில் நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது என்று பாராட்டினார்கள்.
விரைவில் திரைக்கு வரயிருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா, பாலூர் பாபு மற்றும் முத்துக்காளை, நெல்லை சிவா ஆகியோர் நடித்துள்ளனர். எல்.கே.பாட்ஷா தயாரித்து இருக்கிறார்.”
நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி உள்ள கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
"லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் திகில் கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படமாக ‘கலர்ஸ்’ தயாராகி இருக்கிறது. நகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இவர்களுடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜார் டைரக்டு செய்து இருக்கிறார். அஜி இட்டிகுலா தயாரித்துள்ளார். படம், கோட்டயம் மற்றும் சென்னையில் வளர்ந்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’ படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’. இதில் இவருடன் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர்.
கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. டேவிட் - கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.
சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர். ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார். யார் அவர்கள்? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது. இறுதியில் அவர்களை ஸ்பெஷல் ஆபிசர் பிடித்தாரா இல்லையா என்பதை திருப்பங்கள் நிறைந்து உருவாக்கி வருகிறார்கள்.
ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பவுடர்’ படத்தின் முன்னோட்டம்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.
வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி, ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.
பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.
ஒளிப்பதிவாளர் ராஜா பாண்டி. இசை லியாண்டர் லீ மார்ட்டி. படத்தயாரிப்பாளர் ஜெய ஸ்ரீ விஜய்.
அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்ராஜ், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘இன்ஃபினிட்டி’ படத்தின் முன்னோட்டம்.
மென்பனி புரோடக்ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார்.

மேலும் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். டாம் ஜோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி உள்ளார்.
ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சுமோ படத்தின் முன்னோட்டம்.
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து, சிவா-பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம், ‘சுமோ.’ இந்த படத்தை ஹோசிமின் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ‘சுமோ’ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன.

படத்தை பற்றி இயக்குனர் ஹோசிமின் கூறியதாவது:- ‘‘சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது. கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக உள்ள புஷ்பா படத்தின் முன்னோட்டம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், பாபி சிம்ஹா வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக நடிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகின் ராவ், அஞ்சனா கீர்த்தி நடிப்பில் உருவாக உள்ள ‘வெற்றி’ படத்தின் முன்னோட்டம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார்.
மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர்.
ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முதல்முறையாக ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் முதன்மை நாயகியாக நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதூப் அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.
ராஜா ராமமூர்த்தி இயக்கி இருக்கிறார். ஷ்ரேயா தேவ் டூபே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கீர்த்தனா முரளி மேற்கொண்டுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: சமூகத்தை பொருத்தவரை, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற 4 பண்புகளும் ஒரு நல்ல பெண்ணின் தகுதியாக கருதப்படுகிறது. அப்படி நான்கு பண்புகளும் அமையப்பெற்ற ஒரு நல்ல பெண்ணை பற்றிய கதை இது. என கூறி உள்ளார்.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
அருண்விஜய்யின் 30 வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள்.
பாலா தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ள ‘விசித்திரன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிசாசு-2 படத்தின் முன்னோட்டம்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அதேபோல் ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது: “பிசாசு-2, முழுக்க முழுக்க பேய் கதையாக தயாராகிறது. இது, சிரிப்பு பேய் அல்ல. ஆக்ரோசமான பேய். முதல் பாகம் தொடர்பான சில காட்சிகள் அமைந்திருக்கும். முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும். படத்தில், மிக பயங்கரமான பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக்கும். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும்.” என கூறி உள்ளார்.






