என் மலர்
முன்னோட்டம்
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை மையமாக வைத்து இயக்குனர் பரத்பாலா அறிதுயில் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள்.
இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா.
'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள்.
பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம்பரியத்தை படமாக்குகிறது.
இது குறித்து பரத்பாலா கூறும்போது, ‘“என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார்.
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.
மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர் நடிப்பில் உருவாகி வரும் எறிடா படத்தின் முன்னோட்டம்.
மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், 'எறிடா' படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'எறிடா' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் 'எறிடா'. இதற்கு "காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை" என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.

ஒய்.வி.ராஜேஷ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். எஸ்.லோகநாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபிஜித் ஸைலநாத் இசையமைத்துள்ளார். எடிட்டராக சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநராக அஜய் மன்காட், ஆடை வடிவமைப்பாளராக லிஜி ப்ரேமன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரனின் பயோபிக்கான 800 படத்தின் முன்னோட்டம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார்.
தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், மூவி டிரெயின் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிவா நந்தீஸ்வரன் கவனிக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு இறுதியில் வெளியிட உள்ளனர்.
கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார்.
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
சுப்ரமணியம்சிவா இயக்கத்தில் சமுத்திரகனி, ஆத்மியா நடிப்பில் உருவாகி இருக்கும் வெள்ளை யானை படத்தின் முன்னோட்டம்.
திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கியவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். சின்ன இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை நாயகனாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை.

‘மனம் கொத்திப் பறவை’ ஆத்மியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை, வைட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்களை இயக்குனர் ராஜு முருகன், உமாதேவி, அறிவு, அந்தோணிதாசன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
பா.விஜய் இயக்கத்தில், ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.
நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.
ஆதிராஜன் இயக்கத்தில் வி.ராஜா, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘அருவா சண்ட.’ சமூக புரட்சியை கருவாக கொண்ட கதையம்சம் உள்ள படம், இது. வி.ராஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். ‘அருவா சண்ட’ படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்.
‘அருவா சண்ட’ படம் குறித்து அவர் கூறியதாவது: “என்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இதுபோன்ற படங்கள் அமைவது, மிகவும் அரிது. சமீபகாலத்தில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம், இதுதான். விஜய்சேதுபதியுடன், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன்.
‘டப்பிங்’ பேசும்போது என்னை அறியாமலே கண்கலங்கினேன். அப்படி ஒரு ‘கிளைமாக்ஸ்’ காட்சி, படத்தில் இருக்கிறது. படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக-கதைநாயகனாக நடித்துள்ள வி.ராஜா, மேலும் பல சமூக சிந்தனைகளை கொண்ட படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்” என்றார்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் மைத்ரேயா, துஷாரா விஜயன், சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்புள்ள கில்லி’ படத்தின் முன்னோட்டம்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார்.
இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.






