என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் வசந்த முல்லை படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். 

    சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது.

    இப்படத்திற்கு வசனம் - பொன்னி வளவன், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேஷன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகிறார்கள்.
    கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மிடில் கிளாஸ் படத்தின் முன்னோட்டம்.
    'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் மிடில் கிளாஸ் என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். 
     
    'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

     ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 
    விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஜி.டி.ஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 
    அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படத்தின் முன்னோட்டம்.
    பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரித்துள்ள படம் ‘அந்தகாரம்’. அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படம் குறித்து இயக்குனர்  விக்னராஜன் கூறியதாவது: அந்தகாரம் என்றால் புதையல்கள் நிறைந்த ஒரு இடம். அந்த இடத்தை சாத்தான்களும், பிசாசுகளும் பாதுகாக்கிறது என்று குறிப்பிடுகிறது பைபிள். இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இப்படம் முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூன்று கதைகள் அவை ஒன்றோடொன்று தொடர்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
    நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிவா நந்தீஸ்வரன் கவனித்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. 
    மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாறா படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 

    இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

    அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் `காதலிக்க யாருமில்லை' படத்தின் முன்னோட்டம்.
    கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் `காதலிக்க யாருமில்லை'. திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். குறும்படம் இயக்கி பிரபலமான கமல் பிரகாஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
    கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என 4 பேர் நாயகிகள். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும் என கூறியுள்ளார்.
    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
    ஜேம்ஸ்வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள 'ஓ அந்த நாட்கள்' படத்தின் முன்னோட்டம்.
    மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

    ஓ அந்த நாட்கள் படக்குழு

    இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். 
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் முன்னோட்டம்.
    ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அஜ்மல் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.
    கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடிப்பில் உருவாகியிருக்கும் டிராமா படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் படம் டிராமா. இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம். எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

    நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. இப்படத்தை அஜூ என்பவர் இயக்கியுள்ளார்.
    ×