என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் முன்னோட்டம்.
    உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒருநாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். 

    தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “உண்மை சம்பவத்தை கருவாக வைத்து வரும் கதைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நிஜ சம்பவங்களை திரைக்கதை என்னும் மாலையாக அழகாக கோர்த்து பல்வேறு இயக்குனர்கள் கதைகளை சொல்லும் விதம் அதிகமாகி வருகிறது.

    நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

    என்றாவது ஒருநாள் பட போஸ்டர்

    குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

    நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.
    ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் முன்னோட்டம்.
    கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

    சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

    அதுல்யா

    படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறியதாவது: இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும்

    செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

    திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள்.
    ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் நமீதா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மியா’ படத்தின் முன்னோட்டம்.
    இ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரிக்கும் படம் ‘மியா’. இதை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் இதில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஜி மோன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி சுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை வினீத் கவனித்துள்ளார்.  

    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது, ‘மியா’ மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது தான் ‘மியா’ படத்தின் கதை. 

    நமீதா

    கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம்” என்றார்.
    ஜிவி.சந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்வகோளாறு படத்தின் முன்னோட்டம்.
    புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்வகோளாறு. ஜிவி.சந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் மார்ட்டின் ஜெயராஜ், யாகவன், ஜெகதீஷ், சக்தி, பாய்ஸ் ராஜன், சிந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனக மீசை வேலு நடித்துள்ளார். பாடல்களுக்கு சரண் பிரகாஷ் இசைஅமைத்துள்ளார். பின்னனி இசையை பாலகணேஷ் கவனிக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் ஸ்ரீநிவாஸ் மேற்கொண்டுள்ளார். 

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: எந்த ஒரு செயல் செய்தலும்  அதில் ஆர்வ மிகுதியால் செய்யும் தவறுதான் ஆர்வகோளாறு. இன்னும் சொல்ல போனால் நமது வாழ்க்கையில் எங்கோ ஒருமுறை ஆர்வகோளாறு நடந்திருக்கும். அது தொழிலில் இருக்கலாம். நட்பில் இருக்கலாம். காதலில் இருக்கலாம். குடும்பத்தில் இருக்கலாம்.

    ஆர்வகோளாறு படக்குழு

    நாம் செய்த ஆர்வகோளாறு நாம் உணர சில நாட்கள் ஆகும், இல்லை சில மாதமாகும், சில வருடங்கள் கூட ஆகலாம். அதை உணரும் பொழுது சிரிப்பு வரும், சில நேரம் அழுகை வரும், தவிக்க முடியாத ரணமும் பாதிப்பும் ஏற்பட்டுவிடும். அதை தவிர்க்க முடிந்தால் அதற்கொரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்லும் திரைப்படம் ஆர்வகோளாறு.
    சந்தோஷ் நம்பிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்திருக்கும் ‘அகண்டன்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘டூலெட்’ படத்தில் நடித்து பாராட்டு பெற்ற சந்தோஷ் நம்பிராஜன் முழுக்க முழுக்க செல்போனில் ஒரு முழு படத்தையும் எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்துக்கு ‘அகண்டன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

    படத்தை பற்றி சந்தோஷ் நம்பிராஜன் கூறியதாவது: “செல்போனில் படமான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது, ‘அகண்டன்.’ இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    அகண்டன் படக்குழு

    ரோட்டில் இரவு சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவராக நடித்து இருக்கிறேன். அவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. கல்லாவில் மனைவியை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற கனவு. அந்த கனவில் இடியாக வந்து விழுகிறது, ஒரு கொலை வழக்கு. அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான்? என்பது கதை.

    அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இதில் நான் ஒரு சீன நடிகருடன் மோதும் சண்டை காட்சி, படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஹரிணி என்ற புதுமுகம் நடிக்க, அவருடன் 30 புதுமுகங்கள் படத்தில் இடம்பெறுகிறார்கள். செல்போனில் படமாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம், சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும்.” என அவர் கூறினார்.
    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் முன்னோட்டம்.
    பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

    படத்தை பற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: “இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.

    கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்ததாக பத்ரி கூறினார்.
    எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் முன்னோட்டம்.
    அட்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிஷி ரித்விக். இவர் எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் மரிஜுவானா. இது ஒரு சைக்கோ திரில்லர் கதை கொண்ட படம். 'தேர்டு ஐ கிரியேஷன்' எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.  

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:- ”ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். கதை உண்மையான சம்பவமே. மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம் தரும் .பெண்ணுக்கான பாதுகாப்பை சமூகம் கொடுக்க வேண்டுமா? இல்லை பெற்றோரின் பொறுப்பா? தவறுக்கு யார் காரணம்? என்னை பொறுத்தவரை பெற்றோர்களே. 40 வயது கடந்த பெண்கள் நிச்சயமாக இந்த படத்தை காண வேண்டும்” என கூறினார்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்கிறார்.

    பிஸ்கோத் படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: "இது சந்தானத்தின் 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். 

    பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.
    அமுதவாணன் இயக்கத்தில் பவாஸ், நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ள ‘கோட்டா’ படத்தின் முன்னோட்டம்.
    அமுதவாணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கோட்டா. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பவாஸ், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு  பணியாற்றியுள்ளனர். ஆலன் செபாஸ்டின் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை வினோத் ஸ்ரீதர் செய்துள்ளார்.  

    கோட்டா படக்குழு

    நல்ல அனுபவத்தை வழங்க, இப்படம் வரும்  தீபாவளி அன்று  திரையில் வெளியாக தயாராக இருக்கிறது. சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற இப்படம், இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து என்கிற அடல்ட் காமெடி ஹாரர் படத்தின் முன்னோட்டம்.
    ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ . இப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா கவனிக்கிறார்.
    வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுகம் தினேஷ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் 'பற்ற வைத்த நெருப்பொன்று' படத்தின் முன்னோட்டம்.
    செல்போன் திருட்டை கருவாக கொண்டு, ‘பற்ற வைத்த நெருப் பொன்று’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. புதுமுகம் தினேஷ், ‘தடம்’ பட நாயகி ஸ்மிருதி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். வினோத் ராஜேந்திரன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “ஒவ்வொரு மனிதருக்கும் மூன்றாவது கை போல் இருப்பது, செல்போன். நமது மனசாட்சிக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவும் செல்போனுக்கும் தெரியும். அதனுள் சேமித்து வைத்த விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். அதுபற்றிய கதை, இது.

    செல்போன் தகவல்களை திருடி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பற்றிய படம். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் இந்த பிரச்சினை எவ்வாறு விபரீதமாகிறது? என்பதை எச்சரிக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
    அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். 

    முற்றிலும் கிராமப்புற பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    ×