என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபம் படத்தின் முன்னோட்டம்.
    விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'டாக்டர்', 'அயலான்', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.

    இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ரூபம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

     2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் 'ரூபம்' படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.
    கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் முன்னோட்டம்.
    ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்பலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் ஓமணப்பெண்ணே. ஹரீஸ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். “ஹரீஸ் கல்யாண் நடித்த ‘தாராள பிரபு,’ ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடியதால், ‘ஓமணப்பெண்ணே’ படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது” என்கிறார், படத்தின் டைரக்டர் கார்த்திக் சுந்தர். 

    “இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும்” என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகிய இருவரும் சொல்கிறார்கள். “படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். 

    படம் முழுவதும் சென்னையில் வளர்ந்து இருக்கிறது. 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன” என்கிறார், டைரக்டர் கார்த்திக் சுந்தர்.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

    இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

    கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

    படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். மார்ச் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் ஸ்ரீ, தீசிகா, வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேராசை’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘பேராசை’. பிரபல இசையமைப்பாளர் சங்கர்கணேசின் மகனுமான ஸ்ரீ, இந்த படத்தின் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகன், கவுசிக். மாடல் அழகிகளான தீசிகா, வெண்பா, கிரிஜா ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 

    ‘பூவிலங்கு’ மோகன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை ஈசன் எழுத, சக்தி அருண்கேசவன், சிஹான் சரவணன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

    ‘பேராசை’ பற்றி அவர் கூறியதாவது: “குடிபோதைக்கு அடிமையானவன் போதையில் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அவனுக்கு எதிராக அமைகின்றன. போதையில் இருந்து அவன் மீண்டானா, இல்லையா? என்பதே படத்தின் கதை என கூறினார்.
    ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாக இருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் முன்னோட்டம்.
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

    ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். 
    கே.வீரகுமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேஸிங் படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் பட உலகின் துணிச்சல் மிகுந்த கதாநாயகிகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். இவர் நடித்திருக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘சேஸிங்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். கே.வீரகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாசி இசையமைத்துள்ளார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தை பற்றி இயக்குனர் கே.வீரகுமார் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். சண்டை காட்சிகளில் வரலட்சுமி ‘டூப்’ போடாமல் நடித்தார். படுபயங்கரமான ‘கார் துரத்தல்’ காட்சியை மலேசியாவில் படமாக்கினோம். அந்த காட்சியிலும் துணிச்சலாக வரலட்சுமி நடித்துள்ளார்.

    வரலட்சுமி சரத்குமார்

    சண்டை காட்சிகளையும், கார் துரத்தல் காட்சியையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் படமாக்கினார். படத்தில் இடம்பெறும் 70 சதவீத காட்சிகள், மலேசியாவில் படமாக்கப்பட்டன. கதைக்கு தேவைப்பட்டதால், மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தினோம்.

    இது, திகிலான கதையம்சம் கொண்ட படம். பெண்களை கடத்தி ஆசைகளை தீர்த்துக் கொண்டபின் கொலை செய்கிறது, ஒரு கும்பல். இளைஞர்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்குகிறார்கள். அவனை பிடிக்க துப்பறிகிறார், வரலட்சுமி. அப்போது சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார், அவன் கொலை குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? என்பதே கதை.”
    அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்த்ரா படத்தின் முன்னோட்டம்.
    ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. 

    “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

    உதய் சங்கர் ( ஸ்டார் & டிஸ்னி இந்தியா சேர்மன் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் முதன்மையான படமாக இருக்கும் என்று கூறினார். 

    தர்மா புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி நடிப்பில் உருவாகி இருக்கும் சிவ சிவா படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் ஜெய் நடிக்கும் 30-வது படத்துக்கு, ‘சிவ சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

    அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    கவிஞர் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகிய 3 பேர்களும் பாடல்களை எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருப்பவர், சுசீந்திரன்.

    இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்தில் ஜெய்யும், தெலுங்கு படத்தில் ஆதியும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
    எஸ்.சுரேஷ்குமார் இயக்கத்தில் சித்தார்த், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் அகடு படத்தின் முன்னோட்டம்.
    “இந்தியாவில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக சமூகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் பாலியல் வன்முறைகள் குறையவில்லை. இந்த கருவை அடிப்படையாக வைத்து, ‘அகடு’ படத்தை உருவாக்கி வருகிறோம்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் எஸ்.சுரேஷ்குமார்.

    படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இவர் மேலும் சொல்கிறார்: “பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘அகடு’ படம் தயாராகி இருக்கிறது. பதற்றத்தை தூண்டும் திரைக்கதை. கொடைக்கானலுக்கு 4 இளைஞர்கள் சுற்றுலா வருகிறார்கள். காமவெறி கொண்ட அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.

    அகடு பட நடிகை

    ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை விடியல் ராஜூ தயாரிக்கிறார். ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. படத்தின் இணை தயாரிப்பு: யுவராஜ் சிங்காரவேலு.”
    மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். 

    இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

    காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு

    பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
    ஆனந்த் ராஜன் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிருசா குரூப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யுத்த காண்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமா, புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது இங்கே புதுமைகள் மலர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் அமைந்த புதிய படம், ‘யுத்த காண்டம்.’ இது, ஒரே ஷாட்டில் படமாகி இருக்கிறது. ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாகவும், ‘கோலி சோடா-2’ படத்தில் நடித்த கிருசா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுரேஷ்மேனன், யோக் ஜேபி, போஸ் வெங்கட் மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். ஆனந்த் ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார். இவர், டைரக்டர் சமுத்திரக்கனியிடம் உதவி டைரக்டராக இருந்தவர். பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

    யுத்த காண்டம் படக்குழு

    படத்தை பற்றி டைரக்டர் ஆனந்த்ராஜன் கூறியதாவது: “இது, யதார்த்த சினிமா. நேர்த்தியான வர்த்தக படமாகவும் இருக்கும். 50 நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பை தொடங்கினோம். ஒரு விபத்தில் சிக்கிய கதாநாயகனும், கதாநாயகியும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் காவல் நிலையத்துக்கு ஏன் சென்றார்கள்? என்பது கதை. படம் ஆரம்பித்து 5-வது நிமிடத்தில், ‘சிங்கிள் ஷாட்’டில் உருவான படம் என்பதை ரசிகர்கள் மறந்து விடுவார்கள்”.
    ×