என் மலர்
முன்னோட்டம்
வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சியான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
கே.எல். புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக ‘சியான்கள்’ படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ’பரோல்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.
’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ’பரோல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
தயாரிப்பு - மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்), எழுத்து இயக்கம் - துவாரக் ராஜா, ஒளிப்பதிவு - மகேஷ் திருநாவுக்கரசு, இசை - ராஜ்குமார் அமல், படத்தொகுப்பு - முனீஸ்
பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வெற்றி நடிப்பில் உருவாகி வரும் தீங்கிரை படத்தின் முன்னோட்டம்.
இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தும், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் பிரபலமான வெற்றியும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு, ‘தீங்கிரை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் கதாநாயகியாக அபூர்வா ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில், ‘நிழல்கள்’ ரவி நடிக்கிறார். பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.
‘தீங்கிரை’ பற்றி இயக்குனர் கூறியதாவது: “சூழ்நிலை சிலரை இரையாக்கும். வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் தொடங்கி, தீங்கு செய்யும். அதுவே ‘தீங்கிரை.’ சைக்கோ, கிரைம், த்ரில்லர் பாணியில் உருவாகும் படம், இது. கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகிறது. ஏ.கே.குமார் தயாரிக்கிறார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர இருக்கிறது”.
ராம்தேவ் இயக்கத்தில் மீரான், மேகனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பழகிய நாட்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை தான் இந்த படம். சண்டைக் காட்சிகள் இன்றி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "கால்ஸ்". ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன். அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.
இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை” என கூறினார்.
அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முன்னோட்டம்.
கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.
கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை – விஜய் தென்னரசு, நடனம் – தீனா, சண்டைப்பயற்சி – ஆக்ஷன் நூர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டைனோசர்ஸ்'. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளதாம்.
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.
வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் பாம்பாட்டம் படத்தின் முன்னோட்டம்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம்“.
நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
முக்கியமான இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், பாடல்கள் - பா.விஜய், யுகபாரதி, விவேகா, எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை - C.பழனிவேல், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – தினேஷ், சிவசங்கர், இணை தயாரிப்பு - பண்ணை A இளங்கோவன், தயாரிப்பு - V.பழனிவேல், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசன்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘பிளாஷ்பேக்’ படத்தின் முன்னோட்டம்.
ரெஜினா கசன்ட்ரா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது, ‘பிளாஷ்பேக்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இதில் அவர் பள்ளிக் கூட ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். டான் சேண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: “அழகான காதல் பின்னணியில், ‘பிளாஷ்பேக்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த சம்பவங்களை நினைவூட்டும்” என்றார், டைரக்டர் டான் சேண்டி.
பாலு & பால்கி இயக்கத்தில், தர்மா, தர்ஷினி, ஆலிஷா நடிப்பில் உருவாகி வரும் சூறாவளி படத்தின் முன்னோட்டம்.
வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.
ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் ( கதாநாயகி ), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா?
இப்படத்தில் தர்மா, தர்ஷினி, ஆலிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். லால்ராய் அசோசியேட்ஸ் சார்பில் லால்பகதூர் தயாரிக்கும் சூறாவளி படத்தில் ஜேக்கப் சாம்யேல் இசையமைக்கிறார். சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாலு & பால்கி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்குகிறார்கள்.
இப்ராகிம் இயக்கத்தில் லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்பு படத்தின் முன்னோட்டம்.
லொள்ளு சபா ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் " கொம்பு ". திஷா பாண்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாண்டியராஜன், சுவாமிநாதன் என பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் பன்னீர்செல்வம், வானதி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் இப்ராகிம் இயக்கி உள்ளார். சுதீப் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தேவ் குரு இசையமைத்துள்ளார். கிரீசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, " இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும்.ஒரு ஊரில் ஆவிகளின் அட்டகாசத்தை அடக்க மாட்டுக் கொம்பு பயன்படுத்துவதை கேள்விப்பட்ட ஆராய்ச்சி மாணவியான திஷா பாண்டே அந்த ஊருக்கு வருகிறார். நாயகனை சந்திக்கிறாள். அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் திகிலாகவும் காமெடியாகவும் இருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன்" என்று கூறினார்.
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முன்னோட்டம்.
'ஏ1' படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் காமெடி படமாக இருந்தாலும், படத்தில் சந்தானம் தாதாவாக நடிக்கிறார்.






