search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைனோசர்ஸ்"

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது..

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே இயக்குனர் எம்.ஆர்.மாதவன் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
    • இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.




    நேற்று 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய கதாப்பாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் துரையாக மாறா நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


     'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.




    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.




    இந்நிலையில் 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் தனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரிஷியும், ஆறுமுகமாக ரமனாவும், பாபு கிளியப்பனாகவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா

    'டைனோசர்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எம்.ஆர்.மாதவன் பேசியதாவது, சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும் நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் எனக்கு தந்தை போன்றவர். நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார். நான் வாழ்நாள் வரை அவரை மறக்க மாட்டேன். 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால், இவர்தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.


    டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா

    என்னை இந்த தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றது இயக்குனர் எச். வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி.  கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார். ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும்.


    டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா

    ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன்  உழைத்துள்ளார்.  இயக்குனர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இங்கு  அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுதுப்போக்காக இருக்கும் நான் கலைப்படம் பண்ணவில்லை கலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

    • இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டார்.

    2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதன்பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். படம் இயக்குவது மட்டுமல்லாது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    மிஷ்கின்

    மிஷ்கின்

    இந்நிலையில் சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தம் அடிக்கும் இயக்குனர்கள் நிச்சயம் வெற்றி இயக்குனர்களாக வலம் வருவார்கள் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, நான் அடுத்த படம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்தார்கள். அருகில் அமர்ந்த ஒரு பையன் தான் இயக்குனர் என்றனர்.


    மிஷ்கின்

    மிஷ்கின்

    புகைப்பிடிக்கும் அடையாளம் அவர் முகத்தில் தெரிந்தது. அப்போதே படம் நிச்சயம் வெற்றி என தெரியும். தம் அடிக்கும் இயக்குனர்கள் வெற்றி பெறுவார்கள். முதல் படத்தில் ஒரு நாளுக்கு 100 சிகரெட் புகைத்தேன், அதன்பிறகு அஞ்சாதே படத்திற்கு சிகரெட் எண்ணிக்கை120 ஆனது. இவ்வாறு அவர் கூறினார். 

    ×