முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன இயக்குனர்

இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது..
முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன இயக்குனர்
Published on

புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே இயக்குனர் எம்.ஆர்.மாதவன் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com