என் மலர்
முன்னோட்டம்
அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி, வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் எக்கோ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-வுடன் 'துவாரகா', தமிழில் அதர்வா-வுடன் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த 'பூஜா ஜாவேரி' இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் ஜி.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் வெளியிடும் ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் முன்னோட்டம்.
தயாரிப்பாளர் ஜி.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “ஆண்கள் ஜாக்கிரதை“ படத்தை வருகிற ஜனவரி 21 ம் தேதி தமிழகமெங்கு வெளியிடுகிறார்.
“ஆண்கள் ஜாக்கிரதை“ இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை சொல்கிறோம்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி வரும் வனம் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.
சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெபி அமலன், ஜெபி அலெக்ஸ் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் கூறியதாவது: “இது, மறுபிறவி கதையம்சம் கொண்ட திகில் படம். கதாநாயகன், கலைக்கல்லூரி மாணவர். கதாநாயகி, காட்டுவாசி. இன்னொரு நாயகி, டாகுமென்டரி படம் எடுப்பவர். ரான் ஏதன் யோஹான் இசையமைக்கிறார். இவர், ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் தேனி மாவட்டம் குரங்கனி பகுதியில் படமாக்கப்பட்டன”.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தின் முன்னோட்டம்.
சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்தார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா இப்பாடத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் ஜெ.எம்.பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் முன்னோட்டம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தி, நேரு, பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார்.
விஜயபாஸ்கர் இயக்கத்தில் திருநங்கைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பில்டர் கோல்டு படத்தின் முன்னோட்டம்.
திருநங்கைகளின் காதல், சோகம், வலி, வேதனை, கோபம், பழிவாங்குதல் ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் சித்தரிக்கும் வகையில், ‘பில்டர் கோல்டு’ என்கிற படம் தயாராகி இருக்கிறது.
முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கியிருக்கும் விஜயபாஸ்கர், படத்தை பற்றி கூறியதாவது: “பில்டர் கோல்டு என்றால் சொக்க தங்கம் என்று பொருள். இது, இந்த கதையின் நாயகியை குறிக்கும். இதுவரை வந்த திருநங்கைகளை பற்றிய கதையில் இருந்து மாறுபட்ட கதை, இது. 3 திருநங்கைகளை சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது.
தளபதி, நாயகன் ஆகிய படங்களின் கதைகளைப்போல் அதிரடி காட்சிகளுடன் கதை நகரும். 800 திருநங்கைகளை வைத்து ஒரு பாடல் காட்சியையும், 400 பேர்களை வைத்து இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கி இருக்கிறோம். படத்தில் வில்லன் இருக்கிறார். அவர் யார்? என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம்.

படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், 70 இடங்களில் ‘கட்’ கொடுத்து, அந்த 70 இடங்களையும் நீக்கியபின், ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், ஜனவரியில் திரைக்கு வரும்” என அவர் தெரிவித்தார்.
பாலாஜி சய்யபுரெட்டி இயக்கத்தில் கிரண் அப்பாவரம், கோமலி பிரசாத் நடிப்பில் உருவாகி வரும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் முன்னோட்டம்.
இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமாக ‘செபாஸ்டியன் பி.சி. 524’ ஒரு அசலான கதையுடன் வந்து கொண்டிருக்கிறது.

ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிப்பில் உருவாகும் படம் ‘செபாஸ்டியன் பி.சி. 524’. பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். மேலும் நம்ரதா தரேகர், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ராஜ் கே நல்லி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விப்லவ் நிஷாதம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
பிரபல இயக்குனர் வி.இசட்.துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'டிஸ்டண்ட்' படத்தின் முன்னோட்டம்.
முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'டிஸ்டண்ட்' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது 'காதலின் தீபம் ஒன்று' குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அறிமுக இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் இயக்கத்தில் சி.எஸ்.கிஷன், ஷ்ரிதா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘அஷ்டகர்மா’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ படத்தை தயாரித்த பட நிறுவனம், எஸ்.செயின்ராஜ் ஜெயினின் மிஸ்ரி என்டெர்பிரைசஸ். இந்த பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளது. பைனான்சும் வழங்குகிறது.
மெர்சல், பாகுபலி, விவேகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகமும் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து செயின்ராஜ் ஜெயினின் மகன் சி.எஸ்.கிஷன், ‘அஷ்டகர்மா’ என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தில் அவர் மனோதத்துவ டாக்டராக வருகிறார். ஷ்ரிதா சிவதாஸ், நந்தினி ராய் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கிறார். இது, மாயாஜாலங்கள் நிறைந்த கதை. படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.
டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் திகில் படங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் மாயத்திரை என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இதில் அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார்.
குஷ்பு, சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது, “மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள்.
தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேயாக வருகிறார். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய் படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது” என்றார்.
ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் யுகேஷ், வர்ஷா விஸ்வநாத் நடிக்கும் ஓங்காரம் படத்தின் முன்னோட்டம்.
நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.
‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காக
புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.
மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார். கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
த.வினு இயக்கத்தில் பிரிட்டோ, அப்ஷரா, ரேஷ்மா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தூங்கா கண்கள்’ படத்தின் முன்னோட்டம்.
கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் "கைதி" ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் "தூங்கா கண்கள்". இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். துரை சுதாகர், த.வினு நிக்கேஷ் ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.
70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படயாக வைத்து உருவாகியிருக்கும் படம் "தூங்கா கண்கள்". இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
தென் தமிழகத்தில் "வாதை" என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து த.வினு உருவாக்கியிருக்கும் படம் "தூங்க கண்கள்". கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜார்ஜ் படம் முழுக்க நடித்திருக்கும் படம் இது. செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.






