என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொற்றவை’ படத்தின் முன்னோட்டம்.
    சி.வி.குமார் எழுதி இயக்கும் படம் ‘கொற்றவை’. மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. கதையின் நாயகனாக ராஜேஷ் கனகசபை, கதைநாயகியாக சந்தனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். டைரக்டர்கள் வேலுபிரபாகரன், கவுரவ் நாராயணன் மற்றும் அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார்.  

    கொற்றவை படக்குழு

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “கொற்றவை, உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம். இவ்வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமானவை. வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்” என கூறினார்.
    சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள சில்லு வண்டுகள் படத்தின் முன்னோட்டம்.
    சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் சில்லு வண்டுகள். சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - R.S.விக்னேஷ், இசை - தேனிசை தென்றல் தேவா, எடிட்டிங் - காளிதாஸ், கலை இயக்குனர் – ஜெயகுமார், நடனம் – அஜெய் காளிமுத்து, ஸ்டண்ட் - கஜினி குபேரன், இணை தயாரிப்பு – மா.குமார் பொன்னுச்சாமி, தயாரிப்பு - தி.கா.நாராயணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுரேஷ் K.வெங்கிடி.

     இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
    யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.

    இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

    கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    வேட்டையன் படக்குழு

    படத்தை பற்றி இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறியதாவது: “நான் இதற்கு முன்பு இயக்கிய ‘வாட்டாக்குடி இரண்யன்’ படம், மனிதனே மனித இனத்துக்கு துரோகம் செய்வதை பேசியது. வனத்தையும், வனவிலங்குகளையும் அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை சொல்ல வருகிறது, ‘வேட்டையன்’. படம் கேரளாவின் மலையட்டூர், இல்லித்தோடு, முக்கம் பகுதிகளில் வளர்ந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில், சில முக்கிய காட்சிகள் படமாக்கபட்டன”.
    கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி சேஸ் படத்தின் முன்னோட்டம்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் அடுத்ததாக நடிக்கும் திகில்  படத்துக்கு ‘தி சேஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்து தி சேஸ் படத்தை உருவாக்கி உள்ளனர். 

    ரைசா

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு தாய், மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை சுற்றி ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளனர். ஊரடங்கில் படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து எடுக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    பரத்மோகன் இயக்கத்தில் பரத், சோனாக்‌ஷி சிங் ராவத், ஜனனி நடிப்பில் உருவாகி வரும் ‘யாக்கை திரி’ படத்தின் முன்னோட்டம்.
    முக்கோண காதல் கதையுடன் உருவாகும் புதிய படம், ‘யாக்கை திரி’. இதில் ஹீரோவாக பரத் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சிங் ராவத், ஜனனி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சோனாக்‌ஷி சிங் ராவத், கொல்கத்தாவைச் சேர்ந்தவராக நடிக்கிறார். பிரதாப்போத்தன் அப்பா வேடத்தில் நடிக்கிறார். 

     சோனாக்‌ஷி சிங் ராவத், பரத்

    பகவதி பெருமாள், பாண்டியராஜன், சுதாசந்திரன், ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரத்மோகன் இயக்கும் இப்படத்தை, எஸ்.சபரீஷ்குமார் தயாரிக்கிறார். இசைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நாட்களுக்குப்பின், பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
    கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முன்னோட்டம்.
    'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. 

    டிரைவர் ஜமுனா படக்குழு

    இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண், கால் டாக்ஸி டிரைவரை, மையமாக  கொண்டு கிரைம் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. 
    ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜு, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார்.

    "அங்காடித் தெரு" "அசுரன்" ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் பர்ஸ்ட்லுக்கும் சமீபத்தில் வெளியாகவுள்ளது. 
    நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி வரும் மூணு முப்பத்தி மூணு படத்தின் முன்னோட்டம்.
    பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம். 

    இயக்குனருடன் சாண்டி

    படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் கபடதாரி படத்தின் முன்னோட்டம்.
    கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் படம் கபடதாரி. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சிபிராஜுடன் நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். 

    சிபிராஜ்

    ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜ் இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், தனஞ்செயனும் எழுதியுள்ளார்கள். 
    மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ’கட்டில்’. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.    

    கட்டில் படக்குழு

    மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார்.

    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

    ஒரு கட்டிடத்தை கட்ட செல்லும் கட்டிடக்கலை நிபுணர்கள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். 10 வருடங்களாக அந்த கட்டிடத்தை யாராலும் கட்டி முடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவருக்காக துப்பறிந்து அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிப்பது, படத்தின் கதை. 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். 

    அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், ஓபூமிகா’வும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.
    பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாழ் திறவா’ படத்தின் முன்னோட்டம்.
    பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தாழ் திறவா’. அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளனர்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
    ×