என் மலர்
சினிமா

கட்டில் பட போஸ்டர்
கட்டில்
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ படத்தின் முன்னோட்டம்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ’கட்டில்’. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
Next Story






