என் மலர்
முன்னோட்டம்
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
அருண்விஜய்யின் 30 வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்கி உள்ளார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்சி அகர்வால், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் முன்னோட்டம்.
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் அதேபோன்ற புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ஒரு புதிய படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘நான் கடவுள் இல்லை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘வாகை சூடவா’ ‘மவுனகுரு’ ஆகிய படங்களில் நடித்த இனியா நடித்துள்ளார். இவர்களுடன் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சாக்சி அகர்வால் நடிக்க, மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில், ‘பருத்தி வீரன்’ புகழ் சரவணன் நடித்துள்ளார்.

ஓய்வுபெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன், அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் ரோகிணி, நகைச்சுவை வேடத்தில் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
படத்தில் நடித்து முடித்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது, ‘‘எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை 64 முறை பார்த்து ரசித்தவன், நான். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்றார்.
எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தின் முன்னோட்டம்.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குகிறார். இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் இதில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ருத்ரன் திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமுதாய அக்கறையோடு உருவாகும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்களாம். எனவே, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார்.
நீலம் புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் முன்னோட்டம்.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்ஷன்ஸ்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். 'பொம்மைநாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம்.குமார், ஹரி, ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு- அதிசயராஜ், இசை- சுந்தரமூர்த்தி, எடிட்டர் - செல்வா RK, கலை - ஜெயரகு, பாடல்கள்- கபிலன், அறிவு, இணை தயாரிப்பு-
யாழிபிலிம்ஸ், வேலவன், லெமுவேல். தயாரிப்பு- பா.இரஞ்சித்.
எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எண்ணித் துணிக’ படத்தின் முன்னோட்டம்.
ஜெய் நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரயிருக்கும் படத்துக்கு ‘எண்ணித் துணிக’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது ஒரு திகில் படம். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் கூறியதாவது: “எண்ணி துணிக படத்தின் வில்லன் கதாபாத்திரம், சர்வதேச கடத்தல்காரன். இந்த வில்லன் வேடத்துக்காக பல நடிகர்களை தேர்வு செய்து பார்த்தோம். மிக ஸ்டைலாகவும், கலக்கலானதாகவும் அந்த கதாபாத்திரம் இருப்பதால் யாரும் பொருந்தவில்லை. வம்சி கிருஷ்ணா கச்சிதமாக பொருந்தினார்.
படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருப்பதால், வில்லன் கதாபாத்திரத்துக்கான உடைகளை அங்கேயே வாங்கி அனுப்பி வைத்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ‘சீதக்காதி’ பட புகழ் சுனில்ரெட்டி அரசியல்வாதியாக வருகிறார்.
வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. சண்டை காட்சிகள், சென்னை சுற்றுப்புறங்களில் படமாகி வருகின்றன. பாடல் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்”. என கூறினார்.
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‘எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார்.

அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் ஸ்ரேயா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமனம் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக ‘கமனம்’ படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
ரத்தன்லிங்கா இயக்கத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படத்தின் முன்னோட்டம்.
'அட்டு' படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா அடுத்ததாக இயக்கும் படம் 'கேங்ஸ்டர் 21'. ஏ.டி.ஆர். புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கும் இப்படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
இதற்கு ஒளிப்பதிவு - பாலாஜி, இசை - விக்ரம், ஸ்டண்ட் - ஸ்டன்னர் சாம், ஆர்ட் - ஆனந்த் என்று இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது.
வி.இசட்.துரை இயக்கத்தில் அமீர் நடிப்பில் உருவாகி வரும் நாற்காலி படத்தின் முன்னோட்டம்.
யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.
'முகவரி', 'காதல் சடு குடு', 'தொட்டி ஜெயா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை 'இருட்டு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.
இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா - க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.
இப்படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.






