என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    பா.விஜய் இயக்கத்தில், ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

    நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.
    ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்’ படத்தின் முன்னோட்டம்.
    ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 

    படம் குறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறியதாவது: 'டைட்டானிக்' படம் தொடங்கி 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தின் கதைக்கு அவ்வளவுதான் தேவைப்பட்டது. அந்த 25 நாட்களிலேயே சுமார் 60 நாட்களுக்கான செலவு பண்ணினார்கள். இந்தக் கதையைப் படிக்கும்போது 'ஆண் பாவம்' படம் ஞாபகம் வந்தது. அந்தத் தலைப்பைக் கேட்டேன், தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். 

    டைட்டானிக் காதலும் கவுந்துபோகும் படக்குழு

    பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என 4 காதல்கள் படத்தில் உள்ளன. ஒரு ஜாலியான படமாக இருக்கும்.'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு வேலை முடியும் என்றால், அதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நீ பெரிய ஆளல்லை. ஒரு கோடி ரூபாய் வேலையை 10 லட்ச ரூபாயில் முடித்தால்தான் நீ பெரிய ஆள்' என்று அப்பா சொல்வார். அதைத்தான் நான் செய்து வருகிறேன்”. என கூறினார். 
    நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் ‘கடமையை செய்’ படத்தின் முன்னோட்டம்.
    நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “கடமையை செய்“. பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக நடித்த “முத்தின கத்திரிக்கா“ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயகுகிறார். ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி, இசை - அருண்ராஜ், கலை – M.G.முருகன், எடிட்டிங் - N.B.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் - பிரதீப் தினேஷ், நடனம் – தீனா, சாய் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட், தயாரிப்பு - T.R.ரமேஷ், ஜாகிர் உசைன்

    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
    புன்னகை பூ கீதா தயாரிப்பில், தினேஷ், தீப்தி சதி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் நானும் சிங்கிள் தான் படத்தின் முன்னோட்டம்.
    புன்னகை பூ கீதா மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'.

    கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - கே.ஆனந்தராஜ், இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, எடிட்டிங் – ஆண்டனி, ஸ்டண்ட் - கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ், கலை இயக்குனர் – ஆண்டனி, நடனம் - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.ஆர்.கே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.கோபி.

    இப்படம் இம்மாதம் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாக உள்ள ‘டான்’ படத்தின் முன்னோட்டம்.
    சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளனர்

    டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கல்லூரி பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
    ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏலே’ படத்தின் முன்னோட்டம்.
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'ஏலே'. சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது. 

    எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி உள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கபேர் வாசுகி இசையமைத்துள்ளார். ரேமண்ட் டெர்ரிக் கிரஸ்டா இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
    விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பிரதீப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பவுடர் படத்தின் முன்னோட்டம்.
    சாருஹாசன் நடித்த 'தாதா 87', ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, அடுத்ததாக பவுடர் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி, ஆதவன் அகல்யா வெங்கடேசன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

    வித்யா பிரதீப்

    த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர். ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி  இசையமைத்துள்ளார். ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை தயாரித்துள்ளார். 
    அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தின் முன்னோட்டம்.
    வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆலம்பனா. கமர்சியல் பேண்டஸி படமாக உருவாகி வரும் இதை அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். இப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். 

    மேலும் முனிஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளிவெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    வீராபுரம் படக்குழு

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது என்கிறது படக்குழு.
    கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பி.பிரபாகரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திடல் படத்தின் முன்னோட்டம்.
    கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் படம் திடல். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
    இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

    இந்தத் 'திடல்', ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.
    முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கம் படுத்துகிறார்கள். அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட, அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.

    இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு, இசை ஸ்ரீசாய் தேவ். வி. எடிட்டிங் ரோஜர், கலை - சிவா, நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

    இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்து தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் பி.பிரபாகரன்.
    இயக்குனர் சங்கை குமரேசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘முன்னா’ படத்தின் முன்னோட்டம்.
    முன்னா படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். ராமு முத்துச்செல்வன் தயாரித்துள்ள இப்படத்தில், புது முகங்கள் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘‘நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வரவேற்பு, ‘முன்னா’ படத்துக்கும் கிடைக்கும்’’ என்று கூறுகிறார், இயக்குனர் சங்கை குமரேசன்.

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடி கூட்டத்தை சேர்ந்த ஒருவன் நாகரிக வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைகிறது. அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சி அடைந்தானா, இல்லையா? என்பதற்கான விடை, ‘முன்னா’ படத்தில் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் சங்கை குமரேசன்.
    அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். 

    கூகுள் குட்டப்பன் படக்குழு

    மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    ×