என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் உருவாகி இருக்கும் தி மஸ்கிட்டோ பிலாஸபி என்ற படத்தின் முன்னோட்டம்.
    வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தி மஸ்கிட்டோ பிலாஸபி. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது.

    இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுவே தமிழ் சினிமாவின் முதல் "Mumblecore" என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் "Dogme 95" கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது. எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட "தி மஸ்கிட்டோ பிலாஸபி" யில் ரீ டேக்ஸ் என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை.

    இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது கொசுவின் தத்துவம்.

    விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற "லென்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம் தான் "தி மஸ்கிட்டோ பிலாஸபி". "ஓடு ராஜா ஓடு" திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெதின் ஷங்கர் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் டேனி சார்ல்ஸ் ஆவார். கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா படத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

    நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷிவபாரதி, ஜாய் பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜலிங்கா படத்தின் முன்னோட்டம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ். இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா. இப்படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நடித்துள்ளார். மேலும் மாறன்பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர். 

    ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யகண்ணன் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை செந்தில் கருப்பையா கவனிக்கிறார். வல்லவன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஷிவபாரதி இயக்கியிருக்கிறார். 

    இப்படம் குறித்து இயக்குனர் ஷிவபாரதி கூறியதாவது: “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். அழகை பார்த்து காதல்வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம். 

    ராஜலிங்கா படக்குழு

    ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ் சினிமா மீது பழி போடப்பட்டது. இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது. இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது. அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
    அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
    கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

    “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

    சாம் ஜோன்ஸ், ஆனந்தி

    பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை மையமாக வைத்து இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள அறிதுயில் படத்தின் முன்னோட்டம்.
    தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா.

    'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள். பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம்பரியத்தை படமாக்குகிறது. 

    அறிதுயில் பட போஸ்டர்

    இது குறித்து பரத்பாலா கூறும்போது, ‘“என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார்.
    மதன் இயக்கத்தில் மூடர்கூடம் ராஜாஜி, சுஷ்மா ராஜ், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிக்டாக்’ படத்தின் முன்னோட்டம்.
    ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். 

    மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். 

    டிக்டாக் படக்குழு

    படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய். ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 
    ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.

    மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

    கபாலி டாக்கீஸ் படக்குழு

    ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவி சீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ படத்தின் முன்னோட்டம்.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மேலும் யோகிபாபு, கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படம் குறித்து பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது: மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும். நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க அதே போல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம். 

    ராஷ்மிகா, கார்த்தி

    பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனா பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுறார். இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும். கார்த்தி, யோகிபாபு  காமெடி கூட்டணிஅதகளப்படுத்யியிருக்காங்க. கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்க்கார். வெறுமெனே அவர பார்த்தால் கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார். 

    விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகள எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமா, அனைவருக்கும் பிடிக்கும் படமா இருக்கும். படம் அழகா வந்தததில் எங்களுக்கு முழு திருப்தி. ரசிகர்களின் பாராட்டுதலுக்காக தான் காத்திருக்கிறோம். ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது “சுல்தான்” திரைப்படம்.
    சேவியர் பிரிட்டோவின் எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் "அழகிய கண்ணே" படத்தின் முன்னோட்டம்.
    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

    பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.

    இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.

    ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார். 

    நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். "அங்காடித் தெரு" "அசுரன் " ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார்.

    மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் செகண்ட் லுக் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 

    புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் முன்னோட்டம்.
    அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கமலி பிரம் நடுக்காவேரி‬. இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஆனந்தி

    காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதை தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.
    எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
    மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 

    பிஸ்தா பட போஸ்டர்

    கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கத்தில் சின்னா, ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் கணேசாபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் பி.காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாசும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: மதுரையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 90ஸ் காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான  கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.

    இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
    ×