என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கே.வீரகுமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சேஸிங் படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் பட உலகின் துணிச்சல் மிகுந்த கதாநாயகிகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். இவர் நடித்திருக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘சேஸிங்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். 

    கே.வீரகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாசி இசையமைத்துள்ளார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வரலட்சுமி சரத்குமார்

    படத்தை பற்றி இயக்குனர் கே.வீரகுமார் கூறியதாவது: “இது, திகிலான கதையம்சம் கொண்ட படம். பெண்களை கடத்தி ஆசைகளை தீர்த்துக் கொண்டபின் கொலை செய்கிறது, ஒரு கும்பல். இளைஞர்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்குகிறார்கள். அவனை பிடிக்க துப்பறிகிறார், வரலட்சுமி. அப்போது சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார், அவன் கொலை குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? என்பதே கதை.” என கூறினார்.
    வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முன்னோட்டம்.
    சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிப்பில் உருவாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

    மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி

    அதேபோல் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். 
    பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் முன்னோட்டம்.
    பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருப்பதாக இயக்குனர் பாலா அரன் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். 

    பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழு

    இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராம்-சதீஷ் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது. இத்திரைப்படத்தின் கதைக்களம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. 
    ஜே பார்த்திபன் இயக்கத்தில் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மிருகா படத்தின் முன்னோட்டம்.
    'ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

    மிருகா படக்குழு

    இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா'.
    கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இந்த படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. 

    கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார். 

    அன்பிற்கினியாள் பட போஸ்டர்

    தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர். 

    இந்த தகவலை அறிந்த தந்தை ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை நிறுத்துகிறார். இதனால் வேதனையில் ஹெலன் மாயமாகிறாள். அவரை தந்தை தேடி அலைகிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெலன் என்ன ஆனாள் என்பதே படத்தின் கதை. 
    பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கி இருக்கும் தோப்புக்கரணம் படத்தின் முன்னோட்டம்.
    பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கைலா படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

     தோப்புக்கரணம் படத்தில் கோகன், அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

    இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த ஸ்டீவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.
    டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் முன்னோட்டம்.
    டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. இதில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ‘சங்கர்குரு’ ராஜா, மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் இருக்கிறார்கள். ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

    படத்தை பற்றி இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது: “ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் கொட்டும் மழையில் சந்திக்கிறார்கள். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இது ஒன்று போதாதா? 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடி எதிர்ப்புகளைச் சமாளித்து கொட்டும் மழையில் ஒன்று சேர்கிறார்கள்” என்பது தான் கதை.

    மழையில் நனைகிறேன் படக்குழு

    படத்தின் உச்சகட்ட காட்சியை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு கனமான ‘கிளைமாக்ஸ்’ இடம்பெறுகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி, அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்”.
    வினோத் விஜயன் இயக்கத்தில் சாய் ராம் ஷங்கர், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகும் ‘மாரீசன்’ படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’. ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக சாய் ராம் ஷங்கர் நடிக்கும் இத்திரைப்படத்தில், நான்கு மர்மக் கொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும் அவர் எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை.

    மாரீசன் படக்குழு

    வினோத் விஜயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஓ மை பிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார்.

    தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படத்தை இயக்குநர் வினோத் விஜயன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
    இயக்குனர் சாமி இயக்கத்தில் மாஹின், டாவியா நடிப்பில் உருவாகி வரும் அக்கா குருவி படத்தின் முன்னோட்டம்.
    புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குனர் சாமி, அதனை தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

    அக்கா குருவி படக்குழு

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகும் 'கங்காதேவி' படத்தின் முன்னோட்டம்.
    'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டிமுனி' படத்தை இயக்கியதன் மூலம்  கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது.  யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். 

    இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.

    யோகிபாபு, மில்கா செல்வகுமார்

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும். 

    குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார். அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்'' என்றார்.
    ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகின் நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார். இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். 

    இப்படத்தில் பிக்பாஸ் முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். 
    அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்ராஜ், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘இன்ஃபினிட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. நட்டி நட்ராஜ்  கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். 

    நட்ராஜ்

    மேலும் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். டாம் ஜோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு  பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி உள்ளார்.
    ×