என் மலர்
முன்னோட்டம்
ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேஷி நடிப்பில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தின் முன்னோட்டம்.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

பாபி சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. இப்படத்திற்கு வசனம் - பொன்னி வளவன், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேஷன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகிறார்கள்.
நந்தி இயக்கத்தில் வருண், திவ்யா ராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் போலீஸ்காரன் மகள் படத்தின் முன்னோட்டம்.
ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழில் ‘போலீஸ்காரன் மகள்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் வளர்ந்துவரும் நாயகியான திவ்யா ராவ் இதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
காதல் ஜோடிகளை சித்ரவதை செய்து பிரிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளே காதலில் விழுகிறார். மகளையும் காதலனிடம் இருந்து பிரிக்கிறார். சில நாட்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். சாதி வெறியின் கொடூரத் தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த போலீஸ்காரன் மகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார்.ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர். வசனம், தமிழ் உருவாக்கத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா ஏற்றுள்ளார். கதை திரைக்கதை எழுதி நந்தி இயக்கியுள்ளார்.
888 புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கத்தில் உருவாக இருக்கும் சாந்தி செளந்தரராஜன் படத்தின் முன்னோட்டம்.
பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.
இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.
இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, 'ஆஸ்கர் விருது பெற்ற 'ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு - கோபிநாத் D தேவ், படத்தொகுப்பு - சங்கத்தமிழன், கலை - காளி. ப்ரேம் குமார் என பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிப்பில், துரைராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நீ சுடத்தான் வந்தியா படத்தின் முன்னோட்டம்.
டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.
இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ். இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர். அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மட்டி’ படத்தின் முன்னோட்டம்.
இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: “மட்டி படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருந்தன. 14 கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.

எல்லோரும் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டிரைலரில் பார்த்த பிரமிப்பு படத்திலும் இருக்கிறது. படம் 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்”.
சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேச்சுலர்’ படத்தின் முன்னோட்டம்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘பேச்சுலர்’. திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என்ற பரபரப்பான பிரச்சினையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் ஜீ.வி.பிரகாசுடன் திவ்ய பாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். டில்லிபாபு தயாரித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் சதிஸ் கூறியதாவது: “இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொள்ளாச்சியில் இருந்து வேலைக்காக பெங்களூருக்கு போகும் இளைஞரை பற்றிய கதை. அவர் அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார். இரு வருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

இது சினிமா போல் இருக்காது. காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கும். சென்னை, பொள்ளாச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தை தியேட்டர்களில் திரையிட முயற்சித்து வருகிறோம்”.
ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் ஹாஸ்டல் படத்தின் முன்னோட்டம்.
பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - பிரவீன் குமார், இசை - போபோ சசி, படத்தொகுப்பு - ராகுல்,
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’ படத்தின் முன்னோட்டம்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’. இந்த படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக் குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக் கின்றனர்.
ஒளிப்பதிவு- கே.பி.வேல் முருகன், இசை- பி.ஆர்.ஸ்ரீநாத், பாடல்கள்- எஸ். ஞானகரவேல், படத் தொகுப்பு- யுவராஜ், இயக்கம்- ஆர்.டி. குஷால்குமார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன் னால் உடனே பல பேர் எதிர் குரல் கொடுப்பார்கள். ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக் கருத்து இது தான். நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.
நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த உடனே அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் படம் இது” என்றார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார்.

கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.
படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
வி.பி.சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் சந்த்ரா, கர்ணா டொக்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘நின்று கொல்வான்’ படத்தின் முன்னோட்டம்.
காதலுடன் அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது, ‘நின்று கொல்வான்’. இது, அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஒரு இளைஞரை பற்றிய கதை.
அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவருடைய காதலி கடத்தப்படுகிறார். இளைஞர் அமெரிக்கா சென்றாரா, அல்லது காதலியை மீட்டாரா? என்பதை சொல்லும் படம், இது.

அர்ஜுன் சந்த்ரா, யோகி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, கர்ணா டொக்ரா, கீதா ஆகியோர் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடாம் ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி.பி.சங்கர் இப்படத்தை இயக்கி உள்ளார். படம் பெங்களூரு, மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.
அசோக் குமார் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்னும் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் "ஆறா எனும் ஆரா".
ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார். அதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுலக்ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கம் சியோ ஜோஸ், எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன்.ஜெ. ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர், தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
பி.எம்.ரவிநாயக் இயக்கத்தில் ரவிதேஜா வர்மா, மனோசித்ரா நடிப்பில் உருவாகும் ‘மாயமுகி’ படத்தின் முன்னோட்டம்.
சமூக பிரச்சினைகளுடன் ஆன்மிகம் கலந்த படமாக தயாராகிறது, ‘மாயமுகி.’ கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படம், இது. இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், கார்த்திகா, ஆம்னி, சுவாதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் சிறுவர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் கதையம்சம் கொண்ட படம், இது. சமூக பிரச்சினைகள் பற்றியும் படம் பேசும். தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை பி.எம்.ரவிநாயக் இயக்கி உள்ளார். டில்லி பாபு கே.தயாரிக்கிறார்.






