என் மலர்tooltip icon

    சினிமா

    போலீஸ்காரன் மகள் பட போஸ்டர்
    X
    போலீஸ்காரன் மகள் பட போஸ்டர்

    போலீஸ்காரன் மகள்

    நந்தி இயக்கத்தில் வருண், திவ்யா ராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் போலீஸ்காரன் மகள் படத்தின் முன்னோட்டம்.
    ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழில் ‘போலீஸ்காரன் மகள்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் வளர்ந்துவரும் நாயகியான திவ்யா ராவ் இதன் மூலம் தமிழுக்கு வருகிறார். 

    காதல் ஜோடிகளை சித்ரவதை செய்து பிரிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளே காதலில் விழுகிறார். மகளையும் காதலனிடம் இருந்து பிரிக்கிறார்.  சில நாட்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். சாதி வெறியின் கொடூரத் தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த போலீஸ்காரன் மகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

    போலீஸ்காரன் மகள் படக்குழு

    கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார்.ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர். வசனம், தமிழ் உருவாக்கத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா ஏற்றுள்ளார். கதை திரைக்கதை எழுதி நந்தி இயக்கியுள்ளார்.
    Next Story
    ×