என் மலர்
முன்னோட்டம்
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டைனோசர்ஸ்'. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளதாம்.
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.
ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் 'எங்க குலசாமி' படத்தின் முன்னோட்டம்.
'ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'எங்க குலசாமி'. பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் விஜயகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக யூடியூப் புகழ் 'ராக் ஸ்டார்' ராஜகுரு அறிமுகமாகிறார்.
பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்த கதை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.
ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜீ, இசை : சாம் டி ராஜ் இறுதிகட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதியில் படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது.
செ.ஹரி உத்ரா இயக்கத்தில் புதுமுகம் சரத், ஐரா நடிப்பில் உருவாகி வரும் ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் முன்னோட்டம்.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர், செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6, வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது? என்பதே திரைக்கதை. 90 சதவீத சம்பவங்கள் இரவில் நடைபெறுகின்றன. கதாநாயகன் புதுமுகம் சரத். கதாநாயகி ஐரா. சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜ கால்பந்து வீரர்கள் சிலர், படத்தில் நடிக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.
ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, ஜி.காளையப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் முன்னோட்டம்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்து வில்லனாக நடித்துள்ள படம் மதுரை மணிக்குறவன். ராஜரிஷி இயக்கியிருக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க, மாதவிலதா கதாநாயகியாகி நடித்துள்ளார்.
மேலும் சுமன், பருத்திவீரன் சரவணன், குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை - இளையராஜா, பாடல்கள்-முத்துலிங்கம், ஒளிப்பதிவு -டி.சங்கர், படத்தொகுப்பு - வி.டி.விஜயன், ஸ்டண்ட் - ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார், நடனம் - தினா, அபிநயஸ்ரீ, தயாரிப்பு -ஜி.காளையப்பன், வசனம் - வெற்றி விஜய்
இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபம் படத்தின் முன்னோட்டம்.
'டாக்டர்', 'அயலான்', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ரூபம். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தைல் நடிகை பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் 'ரூபம்' படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சுதர்சன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் ஸ்ரீ, கவுசிக், தீசிகா, வெண்பா, கிரிஜா நடிப்பில் உருவாகி வரும் ‘பேராசை’ படத்தின் முன்னோட்டம்.
இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘பேராசை’. பிரபல இசையமைப்பாளர் சங்கர்கணேசின் மகன் ஸ்ரீ, இந்த படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகன், கவுசிக். மாடல் அழகிகளான தீசிகா, வெண்பா, கிரிஜா ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
‘பூவிலங்கு’ மோகன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை ஈசன் எழுத, சக்தி அருண்கேசவன், சிஹான் சரவணன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

‘பேராசை’ படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “குடிபோதைக்கு அடிமையானவன் போதையில் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அவனுக்கு எதிராக அமைகின்றன. போதையில் இருந்து அவன் மீண்டானா, இல்லையா? என்பதே படத்தின் கதை என கூறினார்.
பூபதிராஜா இயக்கத்தில் ஜெய்வந்த், சோனா, சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசால்ட்’ படத்தின் முன்னோட்டம்.
‘காட்டுப்பய சார் இந்த காளி’, ‘மத்திய சென்னை’ ஆகிய படங்களில் நடித்த ஜெய்வந்த், ‘அசால்ட்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இது, கதாநாயகனை மையப்படுத்திய படம். தாதாக்களை பற்றிய கதை.
‘பருத்தி வீரன்’ சரவணன், சென்ட்ராயன், ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சோனா, ‘களவாணி’ புகழ் தேவி, ‘மைனா’ புகழ் நாகு ஆகிய மூன்று கவர்ச்சி நடிகைகளும் வடசென்னை தாதாக்களாக நடித்து இருக்கிறார்கள். பூபதிராஜா இயக்கி இருக்கிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் ஜெய்வந்த் கூறியதாவது: “இது, ஏற்கனவே குறும் படமாக வந்தது. இப்போது முழு நீள படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ‘ரிலீஸ்’ செய்ய தியேட்டர் கிடைக்கவில்லை. அதனால் ஓடிடியில் ‘ரிலீஸ்’ செய்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் இயக்கத்தில் விக்டர், இலக்கியா நடிப்பில் உருவாகி வரும் ‘மரபு’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரபு’. விக்டர் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இலக்கியா நடிக்கிறார். மேலும் ஆனந்த் பாபு வில்லனாக நடித்துள்ளார். சவுந்தர்யன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக மகேஷும், ஸ்டண்ட் இயக்குனராக ஜாகுவார் தங்கமும் பணியாற்றுகின்றனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ, அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு”. இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி அகில், சதுரங்க வேட்டை இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் முன்னோட்டம்.
நிலா புரமோட்டர்ஸ், TN75 K K கிரியேஷன்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரிக்கும் படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா. இதில் கல்லூரி அகில், சதுரங்க வேட்டை இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சூப்பர் சுப்பராயன், கௌசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் மார்ச் 26 முதல் உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.
கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று மன தொய்வடையும் போது தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவருடைய உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
ஒளிப்பதிவு ரஹிம் பாபு. இசை வர்ஷன், ஜெய்டன். எடிட்டிங் சுரேஷ் URS. சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன். கலை ஜான் பிரிட்டோ. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குனர் கெவின்.
அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு கதையில், விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘டாணாக் காரன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இயக்குனர் வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ், இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார்.

‘டாணாக்காரன்’ பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: “தமிழ்நாட்டில், 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே கதை. இது, இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை.
51 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.” என கூறினார்.
அறிமுக இயக்குனர் அருள் இயக்கத்தில் காசிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள ‘காதம்பரி’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.






