என் மலர்
சினிமா செய்திகள்
தனுஷ் சிட்டி ரோபோ போன்றவர் என ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா நடராஜன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ‘ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சஞ்சனா நடராஜன், தனுஷுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் எனது பதற்றத்தை போக்கி நம்பிக்கை அளித்தார். தனுஷின் முதல் நாள் படப்பிடிப்பு முழுவதையும் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். முதல் டேக்காக இருந்தாலும் சரி மூன்றாவது டேக்காக இருந்தாலும் சரி அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

தனுஷ் ‘எந்திரன்’ படத்தில் வரும் ‘சிட்டி ரோபோ’ போன்றவர். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் அவர் வல்லவர். அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்.எச். எல்.எல்.பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார். ராஜூ சுந்தரம் மற்றும் பிருந்தா நடனம் அமைத்துள்ளனர்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தின் 2-ம் பாகத்தை அவரது மகன் மனோஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இளையராஜா இசையில் உருவான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழில் பல்வேறு விருதுகளை வென்று குவித்த இப்படம் தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க உள்ளாராம். மேலும் கமல், ஸ்ரீதேவி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை பாரதிராஜா தான் தயாரிக்க உள்ளாராம்.
நடிகை மாளவிகா மோகனனுக்கு வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மாஸ்டர் படக்குழு மாளவிகா மோகனனுக்கு வாழ்த்து தெரிவித்து, மாஸ்டர் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். விஜய்யுடன் அவர் இருக்கும் அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்த டாக்டர் சேதுராமனின், மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், சஹானா என்கிற ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சேதுராமன் இறந்தபோது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உமாவுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்தவர்கள் சேதுவே மகன் வடிவில் மீண்டும் பிறந்துள்ளதாகக் கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ‘குட்டி சேது வந்தாச்சு’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேதுராமனின் மனைவி உமா, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
அஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல் விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன்? அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.
உங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள். இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பவில்லை என மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.
மும்பை:
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் காதலி உள்பட பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை
தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குதொடர்பான விசாரணைக்காக பாட்னா (சென்ட்ரல்) எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் மும்பை வந்தடைந்தது. இவர்கள் சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணைக்காக பீகார் மாநிலத்தில் இருந்து மும்பை வந்த பாட்னா எஸ்.பி. வினேய் திவாரியை பிரிஹான் மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், பாட்னா எஸ்.பி. வினேய் திவாரி தனிமைப்படுத்தப்பட்டது தொடர்பாக மும்பை மேயர் கிஷோரி பெட்னிகர் விளக்கம் அளித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துக்கொண்டுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.
யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும், கொரோனா சந்தேக நபர்களும் ஹோட்டல்கள் அல்லது வீட்டுத்தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர். அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது. இது ஒன்றும் கட்டாயப்படுத்தல் என நான் நினைக்கவில்லை என மேயர் கிஷோரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுஷாந்த் தற்கொலை வழக்கில் பீஹார் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் இடையே உரலசல்கள் ஏற்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.


இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சின்னம் திரைப்படம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது.
அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். இதற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் கை பேச ஆரம்பித்திருக்கிறார்.

இப்படத்தில் பலக் லால்வாணி கதாநாயகியாகவும், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு கோசுலோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகியுள்ளது.
நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது.
இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில், “தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது. புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் புதிய சங்கத்தின் பிறப்பு அவசியமாகிறது என்றும் தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா விளக்கமளித்துள்ளார்.






