என் மலர்
சினிமா

இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சி தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இமான் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha
Next Story






