என் மலர்
சினிமா

எனக்கு தேவை மூணு தல - மீண்டும் இணையத்தை தெறிக்க விட்ட விக்ரம்
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி, எனக்கு தேவை மூணு தல என்ற வசனம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் விக்ரம் பேசும் வசனமான, எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி... என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே வந்த டிரைலரில், ‘நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல... பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது.

`சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. #SaamySquare #Vikram
Next Story






