என் மலர்

  சினிமா

  இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
  X

  இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிராலம் ஒருவர் இணைந்துள்ளார். #Indian2 #KamalHaasan
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. 

  கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இந்தியன்-2 ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan

  Next Story
  ×