என் மலர்

  சினிமா

  சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
  X

  சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி-2 படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மொத்த படக்குழுவுக்கும் விஷால், லிங்குசாமி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். #Sandakozhi2 #Vishal
  லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.   விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய `செங்கரட்டான் பாறையில' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.   ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

  செங்கரட்டான் பாறையில பாடல் வீடியோ:


  Next Story
  ×