என் மலர்
சினிமா

சீமராஜா டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் உள்ளிட்ட பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டி.இமான் இசையில் படத்தில் இருந்து `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
Dubbing completed today for #SeemaRaja 👍😊 pic.twitter.com/pcWCtLxq4q
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 26, 2018
கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
Next Story






