என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பியார் பிரேமா காதல் - முக்கிய அப்டேட்
Byமாலை மலர்22 May 2018 5:03 AM GMT (Updated: 22 May 2018 5:03 AM GMT)
புதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'.
இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் இருந்து `ஹய் ஆன் லவ்' என்ற பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
படம் பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது,
இயக்குநர் இளன் என்னிடம் கதை சொல்லும் போதே, இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்குப் பிறகு மிக பெரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் "high on love" பாடல் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை பெற காரணம்.
பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். #PyaarPremaKaadhal
Next Story
×