என் மலர்
சினிமா

கடைக்குட்டி சிங்கம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டி.வி. ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.
பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa
Next Story






