என் மலர்

  சினிமா

  படப்பிடிப்பில் அஜித் வழியை பின்பற்றிய சிவகார்த்திகேயன்
  X

  படப்பிடிப்பில் அஜித் வழியை பின்பற்றிய சிவகார்த்திகேயன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படப்பிடிப்பில் அஜித் நடந்துக் கொண்ட மாதிரி நடிகர் சிவகார்த்திகேயனும் அதன் வழியை பின்பற்றி இருக்கிறார்.
  மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

  பொன் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

  இந்த படப்பிடிப்பின் இடைவெளியின் போது, படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

  இதுபோல், ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பின் போது அஜித், படக்குழுவினரோடு கிரிக்கெட் விளையாடின வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×