என் மலர்
சினிமா செய்திகள்
வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஆணாதிக்கமே காரணம் என பிரபல நடிகை தியா மிர்சா தெரிவித்துள்ளார்.
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ''சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான மூத்த நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கமே இதற்கு காரணம். வயதான நடிகர்களின் கதாபாத்திரங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை எழுதுகின்றனர்.

ஆனால் வயதான நடிகைகளை மனதில் வைத்து கதைகள் எழுதுவது இல்லை. ஏராளமான நடுத்தர வயது நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான கதைகளை யாரும் எழுதுவது இல்லை.
படத்துக்கு படம் இளம் நடிகைகளையே நடிக்க வைக்க விரும்புகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் 19 வயது நடிகையுடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாக உள்ளது’’ என்று கண்டித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த நதியா, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது லிங்குசாமி இயக்கும் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் ஆகியும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 15-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கியதற்கு பின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடத்த உள்ளார்களாம். அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதால், அங்கு அவரது டப்பிங் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கு ஆந்திர ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவர்களின் படங்களை தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர்.
விஜய்சேதுபதி சமீப காலமாக நேரடி தெலுங்கு படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற உப்பென்னா தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதால் ஏற்கனவே அவர் நடித்த தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. தற்போது விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ளது. மற்ற படங்களை விற்கவும் பேரம் நடக்கிறது.
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.
தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.
முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.
ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.
முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.
அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.
ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.
பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.
1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.
1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.
பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)
வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.
1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.
இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.
சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.
"அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.
மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.
பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.
"டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.
அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்

சமீபத்தில் கலைமாமணி விருதை பெற்ற நடிகை மதுமிதாவிற்கு படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.
ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார். இந்நிலையில், நடிகை மதுமிதாவிற்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.

இதையடுத்து நடிகை மதுமிதா கலைமாமணி விருது பெற்றதை கவரவிக்கும் வகையில் நடிகர் அபிசரவணன் மற்றும் கும்பாரி படக்குழுவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டிமுனி' படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது.

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மாதிரி பூர்வஜென்ம கதையும், குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார். அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்!'' என்றார்.
மீரான், மேக்னா நடிப்பில் ராம்தேவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பழகிய நாட்கள் படத்தின் விமர்சனம்.
நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. இவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர்.
ஆனால் அது முடியாமல் போகிறது. பின்னர் இருவரும் நன்றாக படித்து பெரியாளாக மாறுங்கள் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்து நாயகி மேக்னா படிப்பில் கவனம் செலுத்தி டாக்டராக மாறுகிறார். ஆனால், மீரான் படிப்பில் கவனம் செலுத்தாமல் குடிகாரனாக மாறுகிறார்.

இறுதியில் மீரானின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டாரா? அல்லது மீரானை திருத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் மீரான் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகி மேக்னா பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்தவர். பல படங்களில் நடித்த அனுபவம் இங்கே அவருக்கு கைக்கொடுத்திருக்கிறது. பள்ளியில் காதல்வயப்பட்டு பேசுவதும்.. காதலரைத் திருத்த முயற்சித்து தோல்வியடைந்து.. விரக்தியின் உச்சத்தில் நின்று பேசுவதும் என சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும் நாயகன் மற்றும் நாயகியின் பெற்றோர்களாக நடித்தவர்கள் தங்களது பதை, பதைப்பை உணர்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இளம் வயதில் ஏற்படும் காதல் அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..? என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பைவிட பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் சிறந்தது என்பதை புரியும்படியாக செல்லியிருக்கிறார். சில காட்சிகளை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். நாயகியின் குடும்பத்தினர் திட்டமிட்டு செய்யும் செயலை ரசிக்க வைத்திருக்கிறார். முதலில் மெதுவாக செல்லும் திரைக்கதை, பின்னர் படத்துடன் பார்ப்பவர்களை ஒன்ற வைக்கிறது.

பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவை வித்தியாசம் பார்க்க முடியாமல் ரசிக்க முடிந்திருக்கிறது. ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடியிருக்கும் பாடல் இதமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பழகிய நாட்கள்’ பார்க்கலாம்.
பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிப்பில் உருவாகி வரும் பாம்பாட்டத்திற்கு தயாராகி இருக்கிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக ‘பாம்பாட்டம்’ படத்தை தயாரித்து வருகிறார்.
நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்ததை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அஜித். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வபோது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
இதே போல் கடந்த வாரம் நடிகர் அஜித் வாடகை காரில் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்ட காவலர்கள் மற்றும் புகாரளிக்க வந்த பொதுமக்கள் பலர் ஒன்று கூடி அவருடன் செல்ஃபி எடுத்ததால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதற்காக இன்று பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்தார். சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்ட நடிகர் அஜித் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றார். நீண்ட நேரமாக காத்திருந்து நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.
பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்தும் வருவார். இந்நிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும்,‘நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலை பாடி வீடியோ வெளியிட்டு ஒரு முயற்சி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிர்கள் பலர் சிறப்பாக இருக்கு என்று பாராட்டி வருகிறார்கள்.
தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனாலும் ஹீரோவாக நடித்த படங்கள் மிகவும் குறைவு.
தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். இதனை பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் நடிக்கிறார்கள். ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் தொழில் அதிபராகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.