என் மலர்
- பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.
- சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தேவசானப்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் கடத்தி சென்றதாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்-பெக்டர் சம்பூரணம் சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.
- தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நிலையில் அம்பாயிரத்தை கைது செய்து, சாராய பாக்கெட்டுகளையும் காவல் துறையினர் அழித்தனர்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ள சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 29 பேர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி,
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிரமாக கள்ள சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக காவல் துறையினர் தீவிர கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஏரியூர் அடுத்த நெருப்பு கிராமத்தில், ஊருக்குள்ளே கள்ள சாராயம் காய்ச்சி வந்த வீட்டை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்பொழுது சாராயம் காய்ச்சி வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் அங்கு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த 30 லிட்டர் சாராய ஊரல்களை மற்றும் 15 லிட்டர் கள்ள சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி காவல் துறையினர் அதே இடத்தில் அழித்தனர். மேலும் ஊரல் போட்டு வைத்திருந்த இடத்தில் அருகில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கள்ள சாராயம் காய்ச்சி வந்த முருகேசன், சாந்தா ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் அரூர் அடுத்த எஸ்.பட்டி பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த வைரமலை என்பவரை கைது செய்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய சுப்புராஜ், உண்ணாமலை ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதே போல் பாப்பாரப்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியின் பின்புறத்தில் கள்ள சாராயம் காய்ச்சி வந்த அண்ணாமணி என்பவரை கைது செய்து 30 லிட்டர் சாராய ஊழல்களை காவல் துறையினர் அழித்தனர்.
மேலும் கோட்டைப்பட்டி அடுத்த வேலனூர் பகுதியில் அம்பாயிரம் என்பவர், தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நிலையில் அம்பாயிரத்தை கைது செய்து, சாராய பாக்கெட்டுகளையும் காவல் துறையினர் அழித்தனர்.
இதே போல் பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த, குமரேசன், ஸ்ரீதர், சண்முகம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ள சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 29 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் 120 லிட்டர் ஊறல்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் அழித்தனர்.
- முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது.
- காளிதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினர்.
கடத்தூர்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி கடிதங்களை அனுப்பி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட தலைவர் அல்லிமுத்து, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்டத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் கலைமணி, செல்வம், கடத்தூர் தலைவர் முருகேசன், செயலாளர் கந்தன், இளைஞர் சங்க துணைத்தலைவர்கள் தமிழரசன், தேவேந்திரன், சதீஷ், காளிதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினர்.
- கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
- சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 16-ந்தேதி அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, மே.18-
கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட் ஜாகீர்வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது28).
இவர் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்த பேக்கரி கடையின் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியை சேர்ந்த பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
- நேற்று கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தருமபுரி ,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் காரிமங்கலம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
- தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி, மே.18-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரெயில்வே நிலையம் அருகே வசித்து வருபவர் வள்ளுவன். இவரது மகள் மெல்பா (வயது28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் நிறுவனத்தில் குறைந்த முதலீடு செய்தால்
அதிகம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.
இதே போல் சாமந்தமலை அருகேயுள்ள குட்டூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (28). இவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் உடனடியாக போன்று செய்தார். அதில் அவர் உங்களுக்கு 2 கோடி பணம் வேண்டும் என்றால் உடடியாக நீங்கள் 7.50 லட்சம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனால் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது.
இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, தேக்வாண்டோ, ஜுடோ ஆகிய விளையாட்டுகளுக்கு கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரை 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், வீளையாட்டு வீரர், வீராங்கனைகள், உலகத்திறனாய்வு தடகள போட்டிகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
முகாமின் நிறைவு நாளான நேற்று காலை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.
இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- பாஞ்சாலி அம்மன் கோவிலில் 49-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- திருமண கோலத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த பாஞ்சாலி அம்மன் கோவிலில் 49-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
18 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பால்குடம் எடுத்தலும், பாஞ்சாலி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முன்னதாக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருவீட்டார் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டில் இருந்து பெண்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதையடுத்து திருமண கோலத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமணத்திற்கு மொய் எழுதி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடு களை 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.
- நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகவும், சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி சாலை, பனகல் தெரு மற்றும் அகரம் சாலை நான்கும் சந்திக்கும் முக்கிய இடமாக பிள்ளையார் கோவில் நான்கு ரோடு அமைந்துள்ளது.
இவைகளில் தான் துணிக்கடைகள், நகை க்கடைகள், மருத்துவ மனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் நகருக்குள் வர வேண்டும் என்றால் இச்சாலைகளின் வழியாகத்தான் வரவேண்டும்.
இந்த சாலைகளில் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்களான டாடா ஏஸ், பால்வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், பள்ளிபேருந்துகள், கார்கள், மேக்ஸி கேப், உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இந்த சாலையில் இருபுறமும் விதிகளை மீறி செல்வதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் இரண்டு திசைகளிலும் வண்டிகள் நிற்க வேண்டியுள்ளது. பனகல் தெரு மற்றும் அகரம் சாலையை டாடா ஏஸ், பால் வண்டிகள், டிராக்டர்கள் செல்வதற்கும், வருவதற்கும் பயன்படுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் காலை நேரங்களில் அவசரமாக பணிக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இச்சாலைகளின் வழியாக கிராமங்களுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.
இதனால் இந்த சாலைகளை பயன்படுத்தி மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள், பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இச்சாலைகளில் எதிரெதிரே வரும் வாகனங்களின் ஒட்டுநர்கள் இடையேவாய்ச் சண்டை ஏற்பட்டு, வீண் தகராறுகள் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது காவேரிப்பட்டணம் நகருக்குள் வருவதை தவிர்த்து கொசமேட்டிலிருந்து ரவி தியேட்டர், ஸ்ரீராமுலுநகர், பாலக்கோடு சாலை வழியாக சேலம் மெயின் ரோடுக்கு வருவதற்கு வழி உள்ளது.
ஆனால் டிராக்டர், டாட்டா ஏஸ், பால் வண்டி, கார், மேக்ஸி கேப் போன்ற வாகனங்கள் வேண்டுமென்றே பனகல் தெருவில் வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கொசமேட்டிலிருந்து பனகல் தெருவுக்கு வருவதை தவிர்க்க கொசமேட்டிலேயே காவல் துறையினர் வைத்திருந்தனர். ஆனால் அதை தற்போது எடுத்து விட்டனர்.
இதனால் அனைத்து வண்டிகளும் இவ்வழியாகவே வருகின்றன. இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்து காவல்துறை யினரால் அவ்விடத்தில் பேரிகார்டு வைத்தும் அந்த இடத்தில் நிரந்தரமாக காவலர்களை அமர்த்தலாம். அப்படி இல்லை என்றால் ஒரு வழிப்பாதையில் வேண்டு மென்றே வரும் வண்டிகளுக்கு சேலம் மெயின் ரோட்டில் உள்ள விநாயகர் சிலை அருகே அபராதம் விதித்தால் பனகல் தெரு வழியாக வண்டிகள் வருவது தவிர்க்கப்படும். மேலும் காவேரிப்பட்ட ணத்தில் போக்குவரத்து போலீசார் குறை வாக இருப்பதால் இந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்ய காவலர்கள் நிற்பதில்லை. எனவே அதிகமான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என கூறினர்.
- வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் இரவு நேரங்களில் கடுமையான வெப்பமும் அனல் காற்று வீசி வந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக 97 முதல் 98 டிகிரி பாரண்ட்ஹீட் வரை வெயிலின் அளவு நீடித்து வந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 100.4 F ( 38 டிகிரி செல்சியஸ்) குறைந்த பட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.
கடுமையான வெயிலின் தாக்கத்தால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. வரும் 29ஆம் தேதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வேர்வை புழக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.







