டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி

Published On 2024-03-08 09:30 GMT   |   Update On 2024-03-08 09:30 GMT
  • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.

இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News