டென்னிஸ்

ஒன்ஸ் ஜபேர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜபேர்

Published On 2022-09-09 06:19 IST   |   Update On 2022-09-09 06:19:00 IST
  • 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், அரையிறுதி ஆட்டத்தில் கார்சியாவை சந்தித்தார்.
  • இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அமெரிக்க ஓபனில் இறுதிக்கு நுழைந்தார்.

நியூயார்க்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், பிரான்சின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார்.

இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

Tags:    

Similar News