டென்னிஸ்

விம்பிள்டென் டென்னிஸ் - 3வது சுற்றில் அலெக்சாண்டர் சுவரேவ் அதிர்ச்சி தோல்வி

Published On 2023-07-09 14:22 IST   |   Update On 2023-07-09 14:22:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
  • இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.

லண்டன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News