டென்னிஸ்

கார்லோஸ் அல்காரஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி கோப்பையை வென்றார் அல்காரஸ்

Update: 2023-03-20 01:28 GMT
  • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
  • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

வாஷிங்டன்:

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

Tags:    

Similar News